எட்டு வழி சாலை விவகாரம்-🏛சென்னை உயர்நீதிமன்றம் திங்கள்கிழமையன்று தீர்ப்பு⚖ - Agnipuratchi

எட்டு வழி சாலை விவகாரம்-🏛சென்னை உயர்நீதிமன்றம் திங்கள்கிழமையன்று தீர்ப்பு⚖

Share This

🛣சென்னை–சேலம் இடையே 💸10 ஆயிரம் கோடி செலவில் 8 வழிச்சாலை அமைக்க சேலம், தர்மபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 🏛5 மாவட்டங்களில் ஆயிரத்து 900 ஹெக்டர் நிலங்களை கையகப்படுத்த 🏛தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது😱. இந்த திட்டத்திற்கு தடை🚫 விதிக்க 🙏கோரியும், திட்டத்தை ரத்து செய்யக் கோரியும் ஐந்து மாவட்ட 🌾விவசாயிகள், தருமபுரி எம்.பி அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் சார்பில் 🏛உயர்நீதிமன்றத்தில் பல 📜மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில், வழக்கின் இறுதி விசாரணை🗣 கடந்த ஆண்டு 📆டிசம்பர் 14ம் தேதி நடைபெற்றது😯. அதனையடுத்து தேதி குறிப்பிடாமல் இவ்வழக்கினை ஒத்தி வைத்த 🏛நீதிமன்றம், 📆ஜனவரி 4ம் தேதிக்குள் ✍எழுத்துபூர்வ வாதங்களை அனைத்து தரப்பிலும் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது😳. இதனையடுத்து, மூன்று மாதங்களுக்கு பிறகு இந்த வழக்கில் நீதிபதிகள் வரும் 📆திங்கள்கிழமை ⌚காலை 10.30 மணி அளவில் தீர்ப்பளிக்க⚖ உள்ளனர்👍.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages