பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி உள்துறை அமைச்சகத்திடம் ராகுல் காந்தி இங்கிலாந்து நாட்டு குடியுரிமையும் வைத்திருப்பதாக புகார் கூறியிருக்கிறார்😐. மேலும், 📆2003-ல் ✈இங்கிலாந்தில் பேக்டிராப் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் தொடங்கப்பட்ட நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் செயலாளராக ராகுல் காந்தி இருந்துள்ளதாகவும் அந்நிறுவனத்தின் 83% பங்குகளை வைத்திருப்பதாவும் சுவாமி தெரிவித்துள்ளார்🔈. மேலும், இது தொடர்பான 📄ஆவணங்களில், '51, சவுத்கேட் தெரு, வின்செஸ்டர், ஹாம்ப்ஷேர் SO23 9EH' என்ற முகவரியுடன் தன்னை இங்கிலாந்து குடிமகன் என்று குறிப்பிட்டுள்ளதாகவும் சுப்ரமணியன் சுவாமி தன் புகாரில் குறிப்பிட்டுள்ளார்😳. இந்த புகாரினையடுத்து, உள்துறை அமைச்சகம் ராகுல் காந்திக்கு 📜நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், இரட்டைக் குடியுரிமை புகார் குறித்து தனது நிலைப்பாட்டை ராகுல் விளக்க🗣 வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், 📆15 நாட்களுக்குள் இந்த 📜நோட்டீசுக்கு பதிலளிக்க வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டுள்ளது😯.
இரட்டைக் குடியுரிமை விவகாரம்😳-ராகுல் காந்திக்கு நோட்டீஸ்📜
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment