🏛மதுரை மக்களவை தொகுதி 🗳தேர்தலை ரத்து🚫 செய்ய கோரிய🙏 வழக்கு தள்ளுபடி. - Agnipuratchi

🏛மதுரை மக்களவை தொகுதி 🗳தேர்தலை ரத்து🚫 செய்ய கோரிய🙏 வழக்கு தள்ளுபடி.

Share This

🏛மதுரை மக்களவைத் தொகுதி சுயேச்சை வேட்பாளர் 👤கே.கே.ரமேஷ் என்பவர், உயர்நீதிமன்றத்தில் 📜மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த 📜மனுவில், "கடந்த 📆மார்ச் 31ம் தேதி 🏛மதுரையில் 🌱அதிமுக தரப்பில் 🏛செளராஷ்டிரா கிளப்பில் நடைபெற்ற கூட்டத்திற்காக செளராஷ்டிரா சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 👥4,000 பேர் தனியார் வாகனத்தில் அழைத்து வரப்பட்டனர்😯. அதில் ஒவ்வொருக்கும் 💸ரூ.500 மற்றும் பிரியாணி, இனிப்பு பெட்டிகள் வழங்கப்பட்டன. இதுமட்டுமின்றி 🌞திமுகவினரும் இதேபோல் 👥வாக்காளர்களுக்கு 💸பணம் மற்றும் 🎁பரிசு பொருள்கள் வழங்குகின்றனர். இது தொடர்பாக 🗳தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை🙄. இதுபோன்று தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் கொடுப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது😡. எனவே மதுரை மக்களவைத் தொகுதி 👆தேர்தலை ரத்து🚫 செய்ய வேண்டும்" என 🙏கோரியிருந்தார். இந்த மனு மீதான விசாரணையின்🗣 போது, 💸பணப்பட்டுவாடாவை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தேர்தல் ஆணையம் 🗣கோரியதை ஏற்று 📜மனுவை தள்ளுபடி செய்து 🏛உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது⚖.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages