🏛பாராளுமன்ற இரண்டாம் கட்ட தேர்தல்🗳-அரசியல் 👥தலைவர்கள் ஓட்டுப்பதிவு👆 - Agnipuratchi

🏛பாராளுமன்ற இரண்டாம் கட்ட தேர்தல்🗳-அரசியல் 👥தலைவர்கள் ஓட்டுப்பதிவு👆

Share This

🏛பாராளுமன்ற இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது🎉. 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கான 🗳ஓட்டுப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது😯. இந்நிலையில், முதலமைச்சர் 💺எடப்பாடி பழனிசாமி, சேலம் எடப்பாடி சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். திண்டிவனதில் பா.ம.க நிறுவனர்  மருத்துவர் இராமதாசு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தங்கள் குடும்பத்தினருடன் வாக்களித்தார்.   🏛தமிழக பாஜக தலைவரும், தூத்துக்குடி தொகுதி பாஜக 👤வேட்பாளருமான 👩தமிழசை சவுந்தரராஜன் சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்தார். சென்னை தேனாம்பேட்டையில் வரிசையில் நின்று 🌞திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்🗳. தமிழக அமைச்சர்கள் செங்கோட்டையன் கோபி அருகே குள்ளம்பாளையத்திலும், அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைஞாயிறு அருகே உள்ள ஓரடியம்புரத்திலும் வாக்களித்தனர்😐. ஆரணி அருகே உள்ள சேவூரில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வாக்களித்தார். 🏛சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் 👤கார்த்தி சிதம்பரம் தனது தாயார் நளினி சிதம்பரம் மற்றும் மனைவி ஸ்ரீநிதியுடன் காரைக்குடியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். முன்னதாக ப.சிதம்பரம் தனியாக வந்து தனது வாக்கை👆 பதிவு செய்தார்👍.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages