🌊வங்கக்கடலில் புயல் சின்னம்☔-முன்னேற்பாடுகள் குறித்து கிரிஜா வைத்தியநாதன் ஆலோச - Agnipuratchi

🌊வங்கக்கடலில் புயல் சின்னம்☔-முன்னேற்பாடுகள் குறித்து கிரிஜா வைத்தியநாதன் ஆலோச

Share This

🌊வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு💪 பெற்றுள்ளது. இது அடுத்த 📆4 நாட்களில் புயலாக வலுவடைந்து வட தமிழகத்தை நோக்கி நகரும். இதனால் 🏛தமிழகத்தில் வரும் 📆ஏப்ரல் 30 மற்றும் 📆மே 1 இரு தினங்களில் ☔கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இதனையடுத்து, இந்தப் புயலானது கரையை கடக்கும் போது ⌚மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்😱 எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது⚠. இந்த நிலையில், 🏛தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் அவசர 🤔ஆலோசனை இன்று மதியம் ⌚12.15 மணியளவில், 🏛தலைமைச் செயலகத்தில் துவங்கியது🎉. இதில், 👥பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வது, மக்களுக்கு விழிப்புணர்வு👀 ஏற்படுத்துவது போன்றவை தொடர்பாக ஆலோசனை🤔 நடத்தப்பட்டது என்று 📰செய்திகள் தெரிவிக்கிறது. மேலும், இந்த ஆலோசனை 👥கூட்டத்தில், வருவாய் நிர்வாக ஆணையர் 🤵சத்யகோபால், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் 🤵அதுல்ய மிஸ்ரா, உட்பட பல முக்கிய அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்👍.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages