🙏கோயில் வளாகத்தில் கடைகள் அமைக்க தடை🚫 குறித்த வழக்கு-🏛உச்சநீதிமன்றம் அதிரடி⚖ - Agnipuratchi

🙏கோயில் வளாகத்தில் கடைகள் அமைக்க தடை🚫 குறித்த வழக்கு-🏛உச்சநீதிமன்றம் அதிரடி⚖

Share This

மதுரை 🙏மீனாட்சியம்மன் கோயிலில் கடந்த ஆண்டு 📆பிப்ரவரி 2ம் தேதியன்று இரவு ⌚பத்து மணி அளவில் திடீரென தீ🔥 விபத்து ஏற்பட்டது. இதனால் கோயிலின் கிழக்கு கோபுரத்தின் அடியில் உள்ள வீர வசந்தராயர் மண்டபத்தில் இருந்த 19 கடைகள் முற்றிலும் எரிந்து நாசமாகின😟. இந்த விபத்து குறித்து ஆய்வு👀 நடத்திய சென்னை சிறப்பு குழு அளித்த அறிக்கையின்📜 அடிப்படையில், மக்கள் பாதுகாப்பு கருதி தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில் வளாகத்திலும் கடை வைக்க 🏛தமிழக அரசு தடை🚫 விதித்தது😳. மேலும் தமிழகம் முழுவதும் உள்ள கோயில் கடைகளை அகற்ற😨 அரசாணை பிறப்பித்தது. இதற்கு எதிர்ப்பு😡 தெரிவித்து 🏛மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் தமிழக அரசின் ஆணைக்கு தடை விதிக்க மறுக்கப்பட்டது. இதனையடுத்து, 🏛உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு குறித்த விசாரணை🗣 ஏற்கனவே நடந்து வந்த நிலையில், இன்று மீண்டும் விசாரணை🗣 நடந்தது. அப்போது, தமிழகத்தில் உள்ள 🙏கோவில் வளாகங்களில் கடைகள் அமைக்க தடை விதித்த 🏛தமிழக அரசின் அரசாணையை📜 ரத்து🚫 செய்து 🏛உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது⚖.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages