💸பணம் இருப்பதாக கூறி 🚚கண்டெய்னர் லாரியை சிறைபிடித்த 👥பொதுமக்கள் ❗ - Agnipuratchi

💸பணம் இருப்பதாக கூறி 🚚கண்டெய்னர் லாரியை சிறைபிடித்த 👥பொதுமக்கள் ❗

Share This

கோவை உக்கடம் அருகே நேற்றிரவு வேகமாகச் சென்ற 🚚கன்டெய்னர் லாரி ஒன்றை அந்த பகுதியை சேர்ந்த 👥பொதுமக்கள் சிறைபிடித்தனர். லாரி 👤ஓட்டுநர் பிரகாஷ் முன்னுக்குப்பின் முரணாக 🗣பேசிய நிலையில், கன்டெய்னர் லாரியில் 💸பணம் இருப்பதாக தகவல் பரவியதால் பொதுமக்கள் அங்கு கூடினர். இதனைத்தொடர்ந்து அங்கு விரைந்து வந்த 🗳தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும், 👮‍♂காவல் துறை 💺அதிகாரிகளும் மேற்கொண்ட விசாரணையில் லாரியில் டீத்தூள் இருப்பதாக ஓட்டுநர் கூறினார். இதனை நம்ப மறுத்த 🙅‍♂பொதுமக்கள் திறந்து காட்டுமாறு கூறினார். 👮‍♂காவல்துறையினர் 👥பொதுமக்களை கலைந்து செல்லுமாறு கூறியும் செல்லாததால், சிறிய தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனையடுத்து மாவட்ட 💺ஆட்சியர் அலுவலகத்திற்கு லாரியை கொண்டு சென்று 🔍சோதனை செய்த்ததில், மூட்டை மூட்டையாக டீத்தூள் இருப்பது 🙄தெரியவந்தது. இதனையடுத்து லாரி விடுவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages