💺ஜெயலலிதாவின் படத்தை அ.ம.மு.க.வினர் பயன்படுத்த தடை🚫 கோரி 🌱அதிமுக'வினர் மனு📜 - Agnipuratchi

💺ஜெயலலிதாவின் படத்தை அ.ம.மு.க.வினர் பயன்படுத்த தடை🚫 கோரி 🌱அதிமுக'வினர் மனு📜

Share This

🌱அதிமுக மூத்த தலைவரும் 🏛தமிழக சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம், முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியனுடன் தலைமை 🗳தேர்தல் 🤵அதிகாரியை சந்தித்து மனு📜 ஒன்றை அளித்துள்ளார். அதில், "டிடிவி.தினகரன் அமமுகவை கட்சியாக பதிவு செய்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவர் மறைந்த 💺ஜெயலலிதாவின் 📸புகைப்படம் மற்றும், 🌱அதிமுகவின் கட்சி கொடியின் நிறத்தையும் தொடர்ச்சியாக பயன்படுத்தி வருகிறார். இது சட்டத்திற்கு எதிரானது😡. எனவே, ஜெயலலிதா படத்தையும், அதிமுக கொடியின் நிறத்தையும் டிடிவி.தினகரன் பயன்படுத்த தடை🚫 விதிக்க வேண்டும்😐" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 
இந்த மனுவினை கொடுத்த பிறகு 📰செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம்🎙, "ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்., தலைமையிலான 🌱அ.தி.மு.க. தான் உண்மையான அ.தி.மு.க. என 🏛நீதிமன்றமே தீர்ப்பளித்துவிட்டது⚖. இரட்டை இலைக்காகவும், அ.தி.மு.க.வுக்காகவும் சொந்தம் கொண்டாட மாட்டேன்🚫 எனத் தினகரன் 🏛நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளார்👍. ஆனால் இதற்கு மாறாக, எங்கள் கட்சி கொடியின் மாதிரியையும், தங்கள் கொடிக்கு நடுவே எங்கள் கட்சித் தலைவியான 💺ஜெயலலிதாவின் படத்தையும் போட்டுக் கொள்கிறார்கள்😳. அ.ம.மு.க.வைச் சேர்ந்தவர்கள் அ.தி.மு.க. கரை வேட்டியைப் பயன்படுத்துகிறார்கள்🙄. இது குறித்து எங்கள் ஆட்சேபத்தைத் 🗳தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளோம். தேர்தல் ஆணையம் எங்களுடைய 🙏கோரிக்கையை பரிசீலனை செய்வதாக உறுதியளித்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages