வங்கிகளுக்கு வழங்கும் ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டது⏬ - Agnipuratchi

வங்கிகளுக்கு வழங்கும் ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டது⏬

Share This

🇮🇳இந்திய 🏦ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டம் 📆இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நடத்தப்பட்டு, வட்டி விகிதம் மற்றும் நிதிக்கொள்கை முடிவுகள் வெளியிடப்படும். அவ்வாறு கடந்த நிதி ஆண்டில் ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் என 2 முறை உயர்த்தப்பட்டும்⏫, 0.25 சதவீதம் குறைக்கப்பட்டது👍. இந்நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் 🤵சக்திகாந்த தாஸ் தலைமையில் நிதிக்கொள்கை 👥குழு இன்று மீண்டும் கூடியது. இக்கூட்டத்தில் நிதிக் கொள்கைக் குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு வட்டி விகிதங்கள், சர்வதேச பொருளாதார நிலை, பணவீக்கம், 💸ரூபாய் மதிப்பு நிலவரம் குறித்து விரிவாக ஆலோசித்தனர்🤔. இதனையடுத்து, ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை 👥குழு தனது கொள்கை முடிவை வெளியிட்டது🙂. இந்த நிதியாண்டின் தொடக்கத்திலேயே🎉 ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது👌. மேலும் 📆2019-20ம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.4 சதவீதத்தில் இருந்து 7.2 சதவீதமாக இருக்கும்😯 என கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.மேலும் ரிவர்ஸ் ரெப்போ 5.75 சதவீதமாகவும் குறைந்துள்ளது⏬. இதையடுத்து 🏠வீட்டுக் கடன் மற்றும் பிற கடன்களுக்கான வட்டி குறைக்கப்படும்⏬ என எதிர்பார்க்கப்படுகிறது👀.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages