ஐக்கிய அரபு எமிரேட்சின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றாக சயித் 🏅பதக்கம் வழங்கப்படுகிறது. அரசர்கள், ஜனாதிபதிகள் மற்றும் மாநிலங்களின் தலைவர்களுக்கு இந்த உயர்ந்த விருது வழங்கப்பட்டு வருகிறது👍. இந்நிலையில், இந்திய பிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு எமிரேட்சின் உயர்ந்த 🏆குடிமகனுக்கான விருதை வழங்கி கவுரவிக்க உள்ளது😯. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடன் உறவுகளை பராமரிப்பதில் பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சிகளை அநாட்டு அரசு பாராட்டியுள்ளது🙂. இது குறித்து, 🏛ஐக்கிய அரபு எமிரேட்சின் டெபுடி சுப்ரீம் கமாண்டர், அபுதாபி பட்டத்து இளவரசர் 🤵ஷேக் முகமது பின் ஜாயித் வெளியிட்ட அறிக்கையில்🗣 கூறியுள்ளதாவது, "மிக உயர்ந்த சயித் பதக்கம் விருதை 🇮🇳இந்திய பிரதமருக்கு வழங்குவதற்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஜனாதிபதி ஷேக் கலீபா பின் சயத் அல் நஹியான் ✍ஒப்புதல் வழங்கியுள்ளார். இரு நாடுகளுக்கும் நீண்ட 📆கால நட்பு மற்றும் கூட்டு ஒத்துழைப்பை💪 உறுதிப் படுத்துவதில் நரேந்திர மோடியின் பங்களிப்பை பாராட்டும் வகையில் இந்த 🏆விருது வழங்கப்படுகிறது👏" என தெரிவித்துள்ளார்🔈.
பிரதமர் நரேந்திர மோடிக்கு உயர்ந்த குடிமகனுக்கான விருது🏆
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment