🏛உச்சநீதிமன்றத்தில் 🙏மன்னிப்பு கேட்டார் ராகுல்காந்தி தரப்பு 🤵வழக்கறிஞர். - Agnipuratchi

🏛உச்சநீதிமன்றத்தில் 🙏மன்னிப்பு கேட்டார் ராகுல்காந்தி தரப்பு 🤵வழக்கறிஞர்.

Share This

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பிரச்சார🎙 கூட்டத்தில்👥 பேசும்போது, 🛩ரபேல் ✍ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என்று 🏛உச்சநீதிமன்ற நீதிபதியே கூறிவிட்டதாக தெரிவித்தார்🙄. இதற்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பும் தெரிவித்தனர். ராகுல்காந்திக்கு எதிராக, 🏛உச்சநீதிமன்றத்தில் பாஜக எம்.பி. மீனாட்சி லேகி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்😳. இந்நிலையில் ராகுல்காந்தி மீதான 🏛நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு🗣 வந்தது. அப்போது, மீனாட்சி லேகி தரப்பு வழக்கறிஞர் வாதாடும்போது🗣, ராகுல்காந்தி தனது பேச்சுக்கு வருத்தம்😟 தெரிவித்திருப்பது வெறும் கண்துடைப்புதான்😐 என்றும், அவரது பதில் 📜மனுவை நிராகரிக்க🚫 வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் ராகுல்காந்தி வருத்தம் தெரிவித்ததற்கு பதில் நிபந்தனையற்ற 🙏மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும் என கண்டித்தனர்😡. இதையடுத்து, பிரதமரை திருடன் என 🏛உச்சநீதிமன்றம் கூறியதாக பேசியதற்கு🗣, மன்னிப்பு🙏 கேட்பதாக ராகுல்காந்தி தரப்பு 🤵வழக்கறிஞர் கூறினார். மேலும் 📆மே 6ம் தேதி ராகுல் காந்தி புதிய 📄பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்வார்👍 எனவும் கூறப்பட்டது. இதனையடுத்து இதன் விசாரணை மே 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது😯 குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages