இலங்கை ராணுவ செயலர், காவல்துறை தலைவர் ராஜினாமா✍-இலங்கை அதிபர் உத்தரவு⚖ - Agnipuratchi

இலங்கை ராணுவ செயலர், காவல்துறை தலைவர் ராஜினாமா✍-இலங்கை அதிபர் உத்தரவு⚖

Share This

🌊இலங்கையில் ஏற்பட்ட 💣தொடர் குண்டு வெடிப்புக்கு 👥ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளது. ✈வெளிநாடு சென்று 📚கல்வி பயின்ற இளைஞர்களும் தற்கொலைப் படை தாக்குதலில் ஈடுபட்டுள்ள தகவல் அதிர்ச்சியை😱 ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இலங்கையில் சர்வதேச பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும்😳 என 🇮🇳இந்தியா மற்றும் அமெரிக்கா தெரிவித்த நிலையில், உரிய நடவடிக்கை எடுக்காததே குண்டு வெடிப்பிற்கு காரணம்🙄 என கூறப்பட்டது. குறிப்பாக தேசிய புலனாய்வு பிரிவினரும் தகவல் அளித்திருந்தனர்😯. ஆனால் உளவுத்துறை அளித்த தகவலின் பேரில் உரிய முன்னச்சரிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டது😡. இதையடுத்து இலங்கை ராணுவ செயலர் 👮ஹேமசிறி பெர்ணான்டோ, காவல்துறை தலைவர் 👮பூஜீத் ஜயசுந்தர ஆகியோர் மீது இலங்கை எம்.பி விஜயதாச ராஜபக்சே ஏற்கனவே புகார் அளித்திருந்தார்😐. இந்நிலையில், 👥இருவரையும் ✍ராஜினாமா செய்ய இலங்கை அதிபர் 🤵மைத்ரிபால சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்⚖. மேலும் இலங்கையில் மீண்டும் தற்கொலை படை தாக்குதல் தொடரக்கூடும்😨 என விமானப்படை புலனாய்வு பிரிவு எச்சரிக்கை⚠ விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages