📰 நாளிதழ் செய்திகள்📰 🗓 மே 16 வியாழன் 🗓 - Agnipuratchi

📰 நாளிதழ் செய்திகள்📰 🗓 மே 16 வியாழன் 🗓

Share This

தமிழ்ச்சொல் அறிவோம்

சித்தப்பிரமை - மனமயக்கம்
➖➖➖➖➖➖➖➖➖➖
காஷ்மீரில் நடந்த என்கவுன்ட்டரில் 2 பயங்கரவாதிகள் பலியாகி உள்ளனர். வீரர் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் ஜூன் மாதம் தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது

கொல்கத்தா வன்முறை எதிரொலியாக மேற்கு வங்கத்தில் இன்று தேர்தல் பரப்புரையில் முடித்துக் கொள்ளுமாறு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

டெல்லி கூட்டத்தில் பங்கேற்க திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சோனியா காந்தி கடிதம்

தேர்தலுக்கு பின் பா.ஜ.க. அல்லாத ஆட்சி அமைக்க மாநில கட்சிகளுடன் பேச்சு நடத்த தயார்; இந்திய கம்யூனிஸ்டு கட்சி

தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க ஷவர்பாத்தில் குளிக்க வேண்டாம் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்

இந்து தீவிரவாதி என கூறியது சரித்திர உண்மை என கமலஹாசன் கூறியுள்ள நிலையில் அவர்  தரித்திரத்தை விலைக்கு வாங்குவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சாடியுள்ளார்

23-வது முறையாக எவரெஸ்ட் சிகரம் ஏறி நேபாள வீரர் சாதனை

வித்யாசாகர் சிலையை பா.ஜ.க.வினர் உடைக்கும் வீடியோ; திரிணாமுல் காங்கிரஸ் வெளியிட்டது

டெல்லிக்கு வரும்போது மம்தாவை ‘வெளிநபர்’ என்று சொல்லலாமா? - அமித் ஷா கேள்வி

அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் 6 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது

‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் மீது அடுத்த மாதம் ஓட்டெடுப்பு

சபரிமலை கோவிலில் நுழைய முயன்ற தமிழக பெண் உள்பட 2 பேர் இந்து அமைப்புகளின் எதிர்ப்பால் கைவிட்டனர்.

5 ஆண்டு சிறை தண்டனை பெற்ற நடிகர் சஞ்சய்தத் முன்கூட்டியே விடுதலை: பேரறிவாளன் தாக்கல் செய்த ஆர்டிஐ-யில் தகவல்

தமிழகத்தில் கத்திரி வெயில் வாட்டி எடுத்து வரும் நிலையில் கோவை, ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்து உள்ளது

கேரளாவில் பருவமழை ஜூன் 6ல் தொடங்கும்

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து ‘நான் சொன்னது சரித்திர உண்மை’ தேர்தல் பிரசாரத்தில் கமல்ஹாசன் உறுதி

தீவிரவாதிகள் ஊடுருவல்? கன்னியாகுமரியில் கடலோர காவல் படை கப்பல் ரோந்து

திருச்சி இரண்டு வயது சிறுமி தொடர்ச்சியாக ஒரு மணி நேரம் அம்பு எய்தி சாதனை படைத்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சாவடிகள் அமைப்பது குறித்த அரசாணை வெளியீடு:தேர்தல் ஆணையம்

அமெரிக்க மாகாணத்தில் கருக்கலைப்புக்கு தடை சட்ட மசோதா நிறைவேறியது

பொன்னேரி அருகே தண்டவாளத்தில் விரிசல்: புறநகர் ரயில்கள் தாமதம்

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் 4-வது முறையாக ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் மீது அடுத்த மாதம் ஓட்டெடுப்பு

மதுராந்தகம் நகராட்சி அலுவலகம் முன் குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்

விபசாரத்தில் ஈடுபடுத்த முயன்றதாக பொய்ப்புகார்: தமிழ் பெண்ணுக்கு சிறை சிங்கப்பூர் கோர்ட்டு தீர்ப்பு

நாடு ஒருவரால் மட்டும் ஆளப்படுவதாக நினைக்கிறார் மோடி: ராகுல் காந்தி

ஐ.எஸ். தெற்கு ஆசிய கிளைக்கு ஐ.நா. தடை

ஜெயலலிதாவின் எண்ணம் நிறைவேற அதிமுக ஆட்சி தொடர வேண்டும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

முஸ்லிம் மக்களின் ஓட்டுகளை பெறுவதற்காக இந்துக்களை தரக்குறைவாக பேசிய கமல்ஹாசனை கைது செய்ய வேண்டும் - எச்.ராஜா

ஜூன் 8, 9 தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் நியமனத்தில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளை புறக்கணிக்கக்கூடாது டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

பாஜக ஆட்சியின் அக்கிரமங்களைத்தான் பேசி வருகிறேன்: மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் தமிழ் தெரியாதவர்களை ரெயில்வே பணிகளில் நியமிக்க தடை கோரி வழக்கு தென்னக ரெயில்வே பொது மேலாளர் பதிலளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

4 தொகுதிகளில் இடைத் தேர்தல்: பிரசாரம் நாளையுடன் ஓய்கிறது

ராமநாதபுரத்தில் நடுரோட்டில் இன்ஸ்பெக்டருடன் டிரைவர் கட்டிப்புரண்டு சண்டை

துரோகம் வென்றதாக வரலாறு கிடையாது:  டிடிவி. தினகரன்

வேலூர் உள்பட பல்வேறு இடங்களில் நிதிநிறுவனம் நடத்தி ரூ.50 கோடி மோசடி செய்த 4 பேர் கைது

மோடி முதல்வராக இருந்தது வரலாற்றின் கரும்புள்ளி: மாயாவதி

ஆம்பூர், பள்ளிகொண்டா பகுதியில் சூறாவளியுடன் பலத்த மழை; மரங்கள்-மின்கம்பங்கள் சாய்ந்தன

இந்தியாவுக்கான சிறப்பு வர்த்தக அந்தஸ்தை நீக்கினால் சீனா பலனடையும்: அமெரிக்க நிறுவனங்கள் எச்சரிக்கை

“பா.ஜனதா வெற்றியின் விளிம்பில் இருக்கிறது” தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது எந்த சந்தேகமும் கிடையாது:  அஜித் பவார்

உலக கோப்பையை இந்திய அணி வெல்லும் கங்குலி நம்பிக்கை

ஆறுமுகசாமி ஆணைய வழக்கு: உச்சநீதிமன்றம் எத்தகைய தீர்ப்பளித்தாலும் ஏற்கத் தயார்: அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி

பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது ஒரு நாள் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி அபார வெற்றி

ஐதராபாத்தில் கடும் வெயில்: சிரஞ்சீவி படத்தில் நடித்த ரஷ்ய நடிகர் திடீர் மரணம்!

தயாரிப்பாளருடன் விமல் சமரசம் ‘களவாணி-2’ படத்துக்கு தடை நீங்கியது

மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பம் ஜூன் 6-ல் தொடங்க வாய்ப்பு : மருத்துவக் கல்வி இயக்குநர் தகவல்

மராட்டிய பயங்கரவாத தடுப்பு படை தலைவராக தேவன் பார்தி நியமனம் 19 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்

தளபதி 63 சாட்டிலைட் உரிமத்தை ரூ. 28 கோடிக்கு வாங்கிய சன் டிவி

மத்தியில் ஆட்சி அமைத்தாலும் பா.ஜனதாவால் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாது சரத்பவார் சொல்கிறார்

முதல்-மந்திரி பதவி வழங்காமல் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அநீதி தேர்தல் பிரசாரத்தில் குமாரசாமி பேச்சால் காங்கிரசில் சலசலப்பு

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கையில் அரிவாளுடன் டிக்-டாக் வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது

கர்நாடகத்தில் 150 தாலுகாக்களில் கடும் வறட்சி எதிரொலி: கலெக்டர்களுடன் குமாரசாமி ஆலோசனை குடிநீர் பிரச்சினையை தீர்க்க உத்தரவு

பெங்களூருவில் 2 ஏ.டி.எம். மையங்களில் இருந்து பணம் திருட்டு: தனியார் பாதுகாப்பு நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் கைது ரூ.95 லட்சம் பறிமுதல்

புதுச்சேரி :கல்லூரிகளில் உயர் படிப்புக்கு சேர பதிவு; சென்டாக் இணையதளம் செயல்படாததால் குளறுபடி, விண்ணப்பிக்க முடியாமல் மாணவ, மாணவிகள் அவதி

கர்நாடக :வீட்டைவிட்டு வெளியேறி காதலனை திருமணம் செய்து கொண்ட பெண் வாட்ஸ்-அப்பில் வீடியோ அனுப்பி பெற்றோருக்கு தகவல்

கோவை:டெபிட்கார்டுக்கு சேவை கட்டணம் பிடித்தம் செய்த வங்கிக்கு, இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவிட்டது.

சென்னையில் பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.73.88 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.69.66 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages