ஒரே 🛤தண்டவாளத்தில் நேருக்கு நேர் 2⃣ 🚆ரயில்கள் - 3 💺அதிகாரிகள் பணியிடை நீக்கம் ❗ - Agnipuratchi

ஒரே 🛤தண்டவாளத்தில் நேருக்கு நேர் 2⃣ 🚆ரயில்கள் - 3 💺அதிகாரிகள் பணியிடை நீக்கம் ❗

Share This

மதுரை - செங்கோட்டை பயணிகள் 🚆ரயில் நேற்று முன்தினம் மாலை அரை மணி நேரம் தாமதமாக திருமங்கலம் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. எதிர்மார்க்கத்தில் இயக்கப்படும் செங்கோட்டை - மதுரை 🚆ரயில் கள்ளிக்குடி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு வந்துள்ளது. இந்த 2⃣ ரயில்களும் ஒரே நேரத்தில் நேருக்கு நேர் வந்ததை அறிந்து 😯அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் உடனடியாக வாக்கிடாக்கியில் 📞தொடர்பு கொண்டு 🚆ரயில்களையும் நிறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து 💺அதிகாரிகள் நடத்திய 🗣விசாரணையில் மொழிப் பிரச்னையால் இந்த சம்பவம் நேர்ந்தது என 👀தெரிய வந்துள்ளது. இதனையடுத்து கட்டுப்பாட்டு அறை 💺அதிகாரி முருகானந்தம், கள்ளிக்குடி நிலைய 💺அதிகாரி தீப்சிங் மீனா, திருமங்கலம் நிலைய 💺அதிகாரி ஜெயக்குமார் ஆகியோரை ரயில்வே துறை பணியிடை ❌நீக்கம் செய்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages