📰 நாளிதழ் செய்திகள்📰 🗓 மே 25 சனிக்கிழமை 🗓 - Agnipuratchi

📰 நாளிதழ் செய்திகள்📰 🗓 மே 25 சனிக்கிழமை 🗓

Share This

தமிழ்ச்சொல் அறிவோம்

சிலை - படிமம்
➖➖➖➖➖➖➖➖➖➖

டெல்லியில் இன்று பா.ஜனதா புதிய எம்.பி.க்கள் கூட்டம்: மோடி மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்படுகிறார்

பாராளுமன்ற தேர்தலில் 27 பெண்கள் உள்பட 197 எம்.பி.க்கள் மீண்டும் வெற்றி

காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் இன்று நடக்கிறது. இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி தன்னுடைய பதவி ராஜினாமா முடிவை அறிவிப்பார் என பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்த மாதம் ஜப்பானில் அமெரிக்க அதிபர் டிரம்பை சந்திக்கிறார் பிரதமர் மோடி

முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் இன்று டெல்லி செல்கின்றனர். டெல்லி செல்லும் அவர்கள் பாஜக தலைவர்களை சந்தித்து பேச உள்ளனர்.

காங்கிரஸ் கட்சி தோல்வி அடையவில்லை; காங்கிரஸ்காரர்கள் தான் தோல்வி அடைந்துள்ளனர் : கே.எஸ்.அழகிரி

நாடாளுமன்ற தேர்தலில் தவறான பிரசாரத்தால் தி.மு.க. வெற்றி : அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

தனியார் பள்ளிகளில் 25 விழுக்காடு இலவச கல்வி கோரும் விண்ணப்பங்களை இணையதளம் மூலம்  அரசே தேர்வு செய்யும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

குஜராத் டியூசன் சென்டரில் தீ விபத்து... 20 மாணவர்கள் உடல் கருகி பலி... மேலும் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அச்சம்

‘அரசியல் என்னுடைய தொழில் அல்ல’ கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி

புதிய விடியல் பிறந்துள்ளது: ஸ்மிருதி நன்றி

‘நாடாளுமன்றத்தில் தூத்துக்குடி மக்களின் குரலாக ஒலிப்பேன்’ கனிமொழி பேட்டி

மாவீரன் ஜெ குரு வின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி  தமிழ்நாட்டில் பல இடங்களில் அவரது உருவப்படத்திற்கு பாமகவினர் மலர்தூவி மரியாதை

விஜயவாடா இந்திரா மைதானத்தில் ஜெகன் பதவியேற்க ஏற்பாடுகள் தீவிரம்

ஒரே நேரத்தில் 60 செயற்கைக்கோள்களுடன் ‘பால்கன்–9’ ராக்கெட் விண்ணில் பாய்ந்தது

சீர்காழி அருகே தைக்கால் பெரிய பள்ளி வாசலுக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம்

மோடிக்கு பாகிஸ்தான் பத்திரிகைகள் புகழாரம்

மாணவர்களை வேறு கட்டிடத்துக்கு மாற்றியதால் செயல்படாத பள்ளியில் பெருகும் குற்றச்சம்பவம்: அதிகாரிகள் அலட்சியம்

சீனாவில் ஆற்றில் படகு கவிழ்ந்து 10 பேர் பலி

ரயில்வே அப்ரண்டீஸ் பணிகளில் இனி தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும்: வாரியத்துக்கு தொழிற்சங்கம் பாராட்டு

‘பேஸ்புக்’கில் 30 லட்சம் போலி கணக்குகள் நீக்கம்

முதல்வர், அதிகாரிக்கு புகார் கடிதம் அனுப்பியதால் ஆத்திரம் மின்வாரிய அலுவலகத்தில் சக ஊழியரை தாக்கிய செயற்பொறியாளர்: திருப்பத்தூரில் பரபரப்பு

38-வது நினைவு தினம் அனுசரிப்பு : சி.பா.ஆதித்தனார் சிலைக்கு அரசியல் கட்சியினர் அஞ்சலி

பொறியியல் படிப்பில் சேர 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு வேண்டுகோள்

தமிழகத்திலேயே குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திருமாவளவன்

ஓடும் காரில் திடீர் தீ விபத்து: தாம்பரத்தில் பரபரப்பு

அரக்கோணத்தில் பட்டப்பகலில் ஆட்டோ டிரைவர் ஓட, ஓட விரட்டி வெட்டிக் கொலை 5 பேர் கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு

ஜூன் 1ம் தேதி முதல் கடற்கரை - திருமால்பூர் விரைவு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

புதுக்கோட்டை பொதுப்பிரிவை சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கியோர் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கான சான்றுகளை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.

அனகாபுத்தூர் சாலையில் தறிகெட்டு ஓடிய லாரி மோதியதில் மின்கம்பம் விழுந்து தீப்பிடித்தது

உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல்

வாக்கு சதவீதம் 2.19 ஆகக் குறைந்ததால் கட்சியின் அங்கீகாரம் ரத்தாகும் நிலை: சோகத்தில் தேமுதிக தொண்டர்கள்

பயிற்சியில் ஈடுபட்ட இந்திய வீரர் விஜய் சங்கர் காயம்

10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள்: மே 27-இல் வெளியாகும்

இந்திய ஓபன் குத்துச்சண்டை: மேரிகோம் தங்கப்பதக்கம் வென்றார்

நோட்டா பயன்படுத்திய வாக்காளர் எண்ணிக்கை குறைந்தது

எதிர்ப்புகளை தாண்டி பிரதமர் மோடி படம் திரைக்கு வந்தது

சென்னைக்கு சப்ளையாகும் போதைப் பொருட்கள்.. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்.

மாற்றத்தை விரும்பும் மக்கள்: டைரக்டர் சேரன் கருத்து

பச்சிளம் குழந்தைகள் விற்பனை வழக்கு...‌ கைதானவர்களின் காவல் நீட்டிப்பு

மராட்டியத்தில் 8 நாடாளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணிக்கு வேட்டு வைத்த வஞ்சித் பகுஜன் அகாடி

மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை.. தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை

மராட்டியத்தில் ‘காங்கிரஸ் தோல்விக்கு பொறுப்பு ஏற்கிறேன்’ அசோக் சவான் பேட்டி

மராட்டியத்தில் நோட்டாவுக்கு 4¾ லட்சம் ஓட்டுகள் : பால்கரில் அதிகம்

சினிமாவில் பிசியாக இருந்துகொண்டே சமூக செயற்பாட்டாளராகவும் வலம் வரும் ஜி.வி.பிரகாஷ் அதிக சம்பளம் கேட்டதாக வெளியான தகவல் குறித்து விளக்கம் அளித்திருக்கிறார்.

கர்நாடக :முதல்-மந்திரி குமாரசாமி ராஜினாமா முடிவு? பரபரப்பு தகவல்கள்

அமெரிக்காவில் பிரபல ஓவிய கலை மியூசியத்தில் பள்ளி மாணவர்கள் சுற்றுலா மேற்கொண்டபோது கருப்பின மாணவர்களுக்கு சில தடைகள் விதிக்கப்பட்டன.

கூட்டணி அரசை கவிழ்க்க அனுமதிக்க மாட்டோம் : ஆலோசனை கூட்டத்திற்கு பின் பரமேஸ்வர் பேட்டி

கொழும்பு, இலங்கையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலாப்பயணிகள் தைரியமாக வரலாம் என பிரதமர் ரனில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.

தேவேகவுடாவுக்காக எம்.பி. பதவி ராஜினாமா : பேரன் பிரஜ்வல் ரேவண்ணா பரபரப்பு பேட்டி

திருப்பூர்:தேர்தல் விதிமுறைகள் வாபஸ் பெறப்பட உள்ளதால், திருப்பூர் ஆடை உற்பத்தி துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அம்பரீஷ் சமாதியில் நடிகை சுமலதா கண்ணீர் : ‘பா.ஜனதாவில் சேருவது குறித்து மக்களிடம் கருத்து கேட்டு முடிவு செய்வேன்’ என பேட்டி

புதுடில்லி: மதம் மற்றும் ஜாதியின் அடிப்படையில் பெயர் வைத்துள்ள, அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்ற டில்லி உயர்நீதிமன்றம், இது குறித்து மத்திய அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.

புதுச்சேரி :தென் மாநிலங்களை பா.ஜனதா ஒதுக்கிவிட முடியாது - வைத்திலிங்கம் நம்பிக்கை

சென்னை: 'உள்ளடி' வேலைகள் பார்த்த நிர்வாகிகள் மீது ஜெ., பாணியில் கடும் நடவடிக்கைகள் எடுக்க திமுக

நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி எம்.எல்.ஏ. பதவியை வைத்திலிங்கம் ராஜினாமா செய்கிறார் காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலை சந்திக்கிறது

சென்னையில் பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.74.25 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.70.37 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages