மின்னணு 👆வாக்குப்பதிவு எந்திரம் மீது 👥எதிர்க்கட்சிகள் சந்தேகம்⁉ - Agnipuratchi

மின்னணு 👆வாக்குப்பதிவு எந்திரம் மீது 👥எதிர்க்கட்சிகள் சந்தேகம்⁉

Share This

மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் முறைகேடு😳 நடைபெற வாய்ப்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டியதையடுத்து😡, யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் விவிபாட் எந்திரம் மூலம், பதிவாகும் 50 சதவீத வாக்குகளை சரிபார்க்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் வழக்கு 🏛உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது😯. ஆனால் ஒரு சட்டசபைத் தொகுதியில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் 5 விவிபாட் வாக்குப் பதிவு சீட்டுக்களை எண்ணிக்கைக்கு எடுத்துக் கொள்ளலாம் என 🏛நீதிமன்றம் தெரிவித்தது🔈. இதில், குறிப்பிட்டதுபோல் 👆வாக்குகள் எண்ணப்பட்டன. இதனையடுத்து, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள், ஒப்புகைச் சீட்டு எந்திரம் மூலம் சரிபார்க்கப்பட்டதாகவும்👍, இதில் ஒரு இடத்தில் கூட எவ்வித முரண்பாடும் கண்டுபிடிக்கப்படவில்லை🚫 எனவும் 🗳தேர்தல் ஆணைய 🤵அதிகாரி ஒருவர் தெரிவித்தார்📣. இதன்மூலம் 🔌மின்னணு 👆வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும்😐 கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages