சபாநாயகரின் 📜நோட்டீசுக்கு எம்.எல்.ஏ பிரபு பதிலளிக்க🗣 தேவையில்லை- சட்டப்பேரவை செயலர் அறிவிப்பு. - Agnipuratchi

சபாநாயகரின் 📜நோட்டீசுக்கு எம்.எல்.ஏ பிரபு பதிலளிக்க🗣 தேவையில்லை- சட்டப்பேரவை செயலர் அறிவிப்பு.

Share This

🌱அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய மூவரும் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு 🏛அரசு கொறடா ராஜேந்திரன், சபாநாயகரிடம் புகார் அளித்தார். இதனையடுத்து சபாநாயகர் 3 எம்.எல்.ஏ.க்களுக்கும் கடந்த 30ம் தேதி நோட்டீஸ் அனுப்பினார். இதை எதிர்த்து😡 ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகிய 2 எம்எல்ஏக்கள் 🏛உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனர். இதையடுத்து, 3 எம்.எல்.ஏ.க்கள் மீதான சபாநாயகரின் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை🚫 விதித்த நீதிபதிகள், 📆4 வாரத்தில் பதிலளிக்குமாறு சட்டப்பேரவை செயலருக்கும் உத்தரவிட்டனர்⚖. இந்நிலையில், விளக்கம்🗣 அளிப்பதற்கு 💺சபாநாயகர் அளித்த ⌚கால அவகாசம் இன்றுடன் முடிவடையும் நிலையில், கூடுதல் அவகாசம் 🙏கோரி கள்ளக்குறிச்சி 👤எம்எல்ஏ பிரபு சார்பில் அவரது வழக்கறிஞர் சட்டப்பேரவை செயலாளரை நேரில் சந்தித்து👀 மனு📜 அளித்திருந்தார். இதனிடையே 🏛உச்சநீதிமன்றம் அளித்த தடை🚫 எம்.எல்.ஏ.பிரபுவுக்கும் பொருந்தும் என்பதால் சபாநாயகரின் நோட்டீசுக்கு அவர் விளக்கமளிக்க தேவையில்லை❌ என்று சட்டப்பேரவை செயலர் தெரிவித்துள்ளார்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages