வாக்குகளை எண்ணுவது தொடர்பான பயிற்சி முகாம் சென்னையில் துவக்கம்🎉 - Agnipuratchi

வாக்குகளை எண்ணுவது தொடர்பான பயிற்சி முகாம் சென்னையில் துவக்கம்🎉

Share This

🏛7 கட்ட மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் 🗳தேர்தலின் போது பதிவான 👆வாக்குகள் வரும் 📆23ம் தேதி அன்று எண்ணப்படுகின்றன😯. ஆனால் இந்த முறை ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் 5 வாக்குப் பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளை 📄ஒப்புகைச் சீட்டுகளுடன் ஒப்பிட்டு எண்ண வேண்டும் என 🏛உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது⚖. இதுபோன்று எண்ணுவது புதிய நடைமுறை என்பதால் இதுதொடர்பாக 🏛மாநிலங்களின் தலைமைத் தேர்தல் 🤵அதிகாரிகள் மற்றும் தேர்தல் அலுவலர்களுக்கு👥 தலைமைத் தேர்தல் ஆணையம் பயிற்சி வழங்க முடிவு செய்துள்ளது👍. அதன்படி, சென்னை சின்னமலையில் உள்ள தனியார் 🏨ஓட்டலில் பயிற்சி தொடங்கியது🎉. இதில் தமிழ்நாடு, கேரளா, குஜராத், புதுச்சேரி மற்றும் லட்சத்தீவுகளின் 🗳தேர்தல் 🤵அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். தலைமைத் தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையர்கள் இதில் பங்கேற்று பயிற்சி வழங்கி வருகின்றனர்🙂. இதைத் தொடர்ந்து 🏢அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்கு எண்ணும் மையத்தில் செய்முறை பயிற்சி வகுப்பு நடக்க உள்ளது😐 குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages