🏛சென்னையில் தரமற்ற 🚰குடிநீர் கேன்களை பறிமுதல் செய்வதில் தீவிர நடவடிக்கை👍 - Agnipuratchi

🏛சென்னையில் தரமற்ற 🚰குடிநீர் கேன்களை பறிமுதல் செய்வதில் தீவிர நடவடிக்கை👍

Share This

🏛சென்னையில் உணவுப் பாதுகாப்பு மண்டலத்தில் 🚰24 குடிநீர் உற்பத்தி ஆலைகள் உள்ள நிலையில், கேன்களில் கொண்டு வரப்படும் 🚰குடிநீரானது தரமற்ற முறையில்😳 இருப்பதாக உணவுப் பாதுகாப்புத் துறைக்கு புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன😟. இதைத் தொடர்ந்து 🍛உணவுப் பாதுகாப்பு 🤵அதிகாரிகள் இன்று சென்னை கொளத்தூர், கோயம்பேடு, வேளச்சேரி ஆகிய மூன்று இடங்களில் மூன்று 👥குழுக்களாக பிரிந்து தீவிர சோதனையில்👀 ஈடுபட்டு வருகின்றனர்😯. பல்வேறு 🚚வாகனங்களில் கொண்டுவரப்பட்ட குடிநீர் கேன்களை ஆய்வு செய்து, அவற்றில், நிறுவனத்தின் ஸ்டிக்கர் இல்லாத, தயாரிப்பு 📆தேதி குறிப்பிடப்படாத கேன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்👍. நீர் கலங்கலாகவும், அசுத்தமாகவும் இருந்த கேன்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து அந்தக் 🚰குடிநீர் 🏭ஆலைகளுக்கு ⚠எச்சரிக்கை 📜நோட்டீஸ் அனுப்பினர். மேலும், தரமற்ற கேன் குடிநீர் தொடர்பாக 📲94440 42322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் புகார் அளிக்குமாறு 👥பொதுமக்களை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்🙏.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages