தவறான சிகிச்சை 🙄எதிரொலி - திமுக 👤வேட்பாளர் 🏥மருத்துவமனை மீது வழக்கு - Agnipuratchi

தவறான சிகிச்சை 🙄எதிரொலி - திமுக 👤வேட்பாளர் 🏥மருத்துவமனை மீது வழக்கு

Share This

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி திமுக 👤வேட்பாளர் மருத்துவர் சரவணனுக்கு சொந்தமான 🏥மருத்துவமனை நரிமேடு பகுதியில் இயங்கி வருகிறது. இந்த 🏥மருத்துவமனையில் நிலையூரை சேர்ந்த பஞ்சவர்ணம் என்பவர் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் சிகிச்சைக்காக 🛌🏻அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து சிகிச்சை பலனின்றி அவர் 😞உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், தவறான சிகிச்சையே அவரது 😞உயிரிழப்புக்கு காரணம் என 👥உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில், உயிரிழந்தவரின் 👥உறவினர்கள் அளித்த 🗣புகாரின் பேரில் சந்தேக 😞மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்கு ✍🏼பதிவு செய்து உயிரிழந்த பஞ்சவர்ணத்தின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அரசு 🏥மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages