குப்பைமேட்டில் கிடந்த மரகதலிங்கம்😱-👮ஐஜி விசாரணை🗣 - Agnipuratchi

குப்பைமேட்டில் கிடந்த மரகதலிங்கம்😱-👮ஐஜி விசாரணை🗣

Share This

🏛திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் ஜமீன் வளாகத்தில் ⛰மலையின் மீது மனோன்மணி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் இருந்த 💰பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரகதலிங்கம் மற்றும் 🏅நகைகள் கடந்த 📆2017ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி திருடுபோனது😳. இதுகுறித்த புகாரின்பேரில் வேட்டவலம் 👮போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், கடந்தாண்டு இந்த வழக்கு 🗿சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், ஜமீன் ஊழியர் 👨பச்சையப்பன் என்பவர், நேற்று முன்தினம் ஜமீன் வளாகத்தில் உள்ள குப்பைமேட்டில், திருட்டுப் போன மரகதலிங்கம் இருப்பதை பார்த்து, ⛪ஜமீன் அரண்மனைக்கு எடுத்து சென்று அங்குள்ள தண்ணீர் தொட்டியில் பாதுகாப்பாக வைத்து விட்டு 👮போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் போலீசார் அந்த லிங்கத்தை காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றனர்😯. இதற்கிடையில், 🗿சிலை கடத்தல் தடுப்பு பிரிவு 👮ஐஜி பொன்.மாணிக்கவேல் நேற்று காலை வேட்டவலம் ஜமீன் வளாகத்திற்கு வந்து அங்குள்ள மனோன்மணி அம்மன் கோயிலையும், கோயிலில் மர்ம ஆசாமிகளால் துளையிடப்பட்ட சுவரையும், மரகதலிங்கம் வைக்கப்பட்ட தண்ணீர் தொட்டி, லிங்கம் கண்டெடுக்கப்பட்ட குப்பைமேடு ஆகிய இடங்களையும் ஆய்வு👀 செய்தார். மேலும், ஜமீன் 👤மகேந்திர பந்தாரியார் மற்றும் 👥ஊழியர்களிடம் விசாரணை🗣 மேற்கொண்டார்👍.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages