🏛தூத்துக்குடியில் 🏭ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த ஆண்டு 📆மே 22ல் நடந்த பேரணியின்போது, 👮போலீசார் 🔫துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 👥16 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தோருக்கு 📆மே 22ல் நினைவஞ்சலி கூட்டம் நடத்த முடிவு செய்து, அதற்கான 🙏அனுமதிகோரி தூத்துக்குடியை சேர்ந்த பேராசிரியை பாத்திமாபாபு, 🏛உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 📜மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், தண்டபாணி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு🗣 வந்தது. 🏛அரசுத்தரப்பில், ‘‘📆மே 22ல் நினைவஞ்சலி 👥கூட்டம் நடத்தினால் பிரச்னை வரும்😳. மறுநாள் 👆வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதனால் வேறு தேதியில் கூட்டம் நடத்துவது தொடர்பாக மனுதாரர் தரப்பு பரிசீலிக்க வேண்டும்😐” என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள், “நினைவஞ்சலி கூட்டத்தை உள் கூட்டரங்குகளில் நடத்த அனுமதி வழங்கலாம்👍. ஊர்வலம் நடத்தக்கூடாது🚫. கூட்டத்தில் யாரெல்லாம் பேசுகின்றனர், கூட்டத்திற்கு எத்தனை பேர் வருவர்⁉என்ற விபரங்களை அரசு வழக்கறிஞரிடம் மனுதாரர் தரப்பு தெரிவிக்க வேண்டும்” என நேற்று தெரிவித்தனர்🔈. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கேட்ட விவரங்களை மனுதாரர் தாக்கல் செய்தார்😯. இதனையடுத்து நினைவஞ்சலி கூட்டம் நடத்த நீதிபதிகள் நிபந்தனையுடன் அனுமதி வழங்கி⚖ வழக்கை முடித்துவைத்தனர்.
Home
அண்மை செய்திகள்
தூத்துக்குடி 🔫துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி 👥கூட்டம் நடத்த அனுமதி-🏛உயர்நீதிமன்றம்.
தூத்துக்குடி 🔫துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி 👥கூட்டம் நடத்த அனுமதி-🏛உயர்நீதிமன்றம்.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment