அந்நிய 💸செலவாணி வழக்கில் 🏛நீதிமன்றத்தில் சசிகலா ஆஜராகவில்லை. - Agnipuratchi

அந்நிய 💸செலவாணி வழக்கில் 🏛நீதிமன்றத்தில் சசிகலா ஆஜராகவில்லை.

Share This

சசிகலா, அவரது அக்கா மகன் பாஸ்கரன் ஆகியோர் 📆1996 - 97 ஆண்டுகளில் ✈வெளிநாடுகளில் இருந்து 📺ஜெஜெ டிவிக்கு எலெக்ட்ரானிக் பொருட்கள் வாங்கியதில் பல 💰கோடி ரூபாய் மோசடி செய்ததாகவும், ⛰கொடநாடு டீ எஸ்டேட் வாங்கியதில் பல 💰கோடி ரூபாய் வெளிநாடுகளில் இருந்து பறிமாற்றம் செய்துள்ளதாகவும் புகார் எழுந்தது😳. இதையடுத்து 🤵அமலாக்கத்துறையினர் சசிகலா மீது 4 வழக்குகள் பதிவு செய்தனர்👍. இதனை தொடர்ந்து, இந்த வழக்கில் சசிகலா மற்றும் பாஸ்கரன் மீது கடந்த 📆2017ம் ஆண்டு மூலம் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது😯. அப்போது சசிகலா தான் எந்த குற்றமும் செய்யவில்லை என்று கூறி, அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் குறுக்கு விசாரணை செய்யும்படி கேட்டுக்கொண்டார்🙏. அதன்படி குறுக்கு விசாரணை நடத்தி முடிக்கப்பட்டது😐. பின்னர் குறுக்கு விசாரணை🗣 குறித்து கேள்வி கேட்பதற்காக சசிகலாவை இன்று நேரில் ஆஜர்படுத்த ⛓சிறை நிர்வாகத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார்⚖. இதனை எதிர்த்து😡 சசிகலா, சென்னை 🏛உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் சென்னை உயர்நீதிமன்றம், சசிகலாவை 📹வீடியோ கான்பரன்சில் ஆஜர்படுத்தி விசாரணை நடத்த உத்தரவிட்டது⚖. அதன்படி சசிகலா இன்று பெங்களூர் ⛓சிறையில் இருந்து, 🏛எழும்பூர் நீதிமன்ற விசாரணைக்கு 📹வீடியோ கான்பரன்சில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது👀. ஆனால் அவர் ஆஜராகவில்லை🙄. 
இந்நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு🗣 வந்தபோது பாஸ்கரன் நேரில் ஆஜரானார்😯. அப்போது 🏛உயர்நீதிமன்ற உத்தரவை⚖ படிக்க🗣 வேண்டியிருப்பதாகத் தெரிவித்த நீதிபதி, தற்போதைய நிலையில் சசிகலாவை வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜர்படுத்த 🏛எழும்பூர் நீதிமன்றத்தில் போதிய வசதிகள் இல்லை என்றும், 📆மே 28ம் தேதி 📹வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார்⚖.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages