புறநகர் 🚉ரயில்களில் 'ஏசி' வசதி செய்ய 🚆தெற்கு ரயில்வே முடிவு⁉ - Agnipuratchi

புறநகர் 🚉ரயில்களில் 'ஏசி' வசதி செய்ய 🚆தெற்கு ரயில்வே முடிவு⁉

Share This

🚆மெட்ரோ ரயில் வசதி சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டது🎉. முழுவதும் ஏசி வசதி கொண்ட இந்த ரயிலில் கட்டணம் சற்று அதிகம்😟. இதனால் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்த இயலாத சூழ்நிலை உள்ளது. இந்த சூழலில் எளிய 👥மக்கள் பயணம் செய்யும் புறநகர் 🚆ரயில்களில் குளிர்சாதன வசதி ஏற்படுத்துவது குறித்து தெற்கு ரயில்வே முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளது👍. இது தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகுல் ஜெயின் தலைமையில் நடைபெற்றது. அப்போது, சென்னை 🚆புறநகர் ரயில்களில் குறைந்தபட்சம் 💸ரூ.5ம், முதல் வகுப்பில் 💸ரூ.40ம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே ஏசி வசதியுடன் பயணிக்க 💸ரூ.55 கட்டணமாக நிர்ணயிக்க ஆலோசனை🤔 செய்யப்பட்டுள்ளது. இது முதல் வகுப்பு கட்டணத்தை விட 1.5 மடங்கு அதிகம்😯. முதல் கட்டமாக சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு 🚆ஏசி ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது😐. இது குறிப்பிட்ட நிறுத்தங்களில் மட்டும் நின்று செல்லும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு🔈 விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது👀.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages