மீண்டும் பிரதமராக பொறுப்பேற்கவிருக்கும் நரேந்திர மோடிக்கு - மருத்துவர் இராமதாசு அய்யா வாழ்த்து! - Agnipuratchi

மீண்டும் பிரதமராக பொறுப்பேற்கவிருக்கும் நரேந்திர மோடிக்கு - மருத்துவர் இராமதாசு அய்யா வாழ்த்து!

Share This

2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று வரும் 26-ஆம் தேதி இந்தியாவின் பிரதமராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்கவுள்ள தங்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் எனது இதயங்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி அவர்களுக்கு மருத்துவர் அய்யா அவர்கள் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தி விவரம்:
2014-ஆம் ஆண்டில் இந்தியாவின் பிரதமராக தாங்கள் பதவியேற்ற போது, ‘இந்தியாவிலுள்ள ஒவ்வொருவரின் முன்னேற்றத்திற்காக உங்கள் ஒவ்வொருவருடனும்  எப்போதும் இருப்பேன்” என்று உறுதியளித்து இருந்தீர்கள். அந்த வாக்குறுதியை நிறைவேற்றியதன் பயனாகவே இப்போது இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராக தங்களை நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள்.
அடுத்த ஐந்தாண்டுகளுக்கு  மக்களுக்கான நலத்திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். உங்கள் தலைமையில் வளமான, வலிமையான நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று நம்புகிறேன். இந்தியாவின் பிரதமர் என்ற முறையில் அனைத்து முயற்சிகளிலும் நீங்கள் வெற்றி பெற எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆங்கில வடிவம்
On behalf of Pattali Makkal Katchi I congratulate you for your landslide victory in 2019 Lok Sabha elections, and for your second term in a row to be sworn in as the Prime Minister of India on 26th May 2019.

The people of our country had acknowledged the fulfillment of your earlier promise "Sabka Saath Sabka Vikas" in 2014 and have given you their historical mandate once again to your good self.

I strongly believe that through your welfare programs for the next 5 years, you will create an inclusive, prosperous and much stronger new India.

I once again, extend my heartfelt wishes for your future endeavor and accomplishments as the Prime Minister of our great nation India.     

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages