ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 🚫தடை விதிக்க 🙏கோரிய 📜மனு தள்ளுபடி⚖
📆ஜூன் 8 மற்றும் 9ம் தேதிகளில் ✍டெட் தேர்வு நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது🔈. இந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தடை🚫 விதிக்க 🙏கோரி கிருஷ்ணகிரியைச் சேர்ந்த 👤பரமானந்தம், சக்திவேல் ஆகியோர் 🏛சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த 📜மனுவில், "🏛தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுச் சான்று 📆ஏழு ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லத்தக்கது என அறிவித்துள்ளது சட்டவிரோதமானது😳. எனவே, தமிழகத்தில் வரும் ஜூன் 8 மற்றும் 9 தேதிகளில் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து❌ செய்யவேண்டும்" என 🙏கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு🗣 வந்த நிலையில், "பிரதான 📚பாடத்திற்கு குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச 🔢மதிப்பெண்கள் நிர்ணயிக்காவிட்டால், பிரதான பாடத்தில் ஒரு மதிப்பெண் கூட எடுக்காதவர்கள் அந்த பாடங்களுக்கு ஆசிரியர்களாகி விடுவர்🙄" என மனுதாரர் சார்பில் வாதிடப்பட்டது🗣. அதனை தொடர்ந்து, "👥லட்சக்கணக்கானவர்கள் தேர்வு எழுத காத்திருப்பதால், இந்த தேர்வுக்கு தடை🚫 விதிக்க கூடாது. கேள்வித்தாள் எப்படி அமைய வேண்டும் என்பதை ✍விண்ணப்பதாரர்கள் தீர்மானிக்க முடியாது" என 🏛அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது😯. அரசுத் தரப்பு விளக்கத்தை ஏற்ற 🏛சென்னை உயர்நீதிமன்றம், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தடை 🙏கோரிய 📜மனுக்களை தள்ளுபடி செய்தது⚖.
No comments:
Post a Comment