ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு இரயில் மூலம் நாள் ஒன்றுக்கு 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - முதலமைச்சர் - முதல்வர் பழனிசாமி.
இதற்காக ரூ65 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதிகளவில் டேங்கர் லாரிகளை இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது
சென்னையில் நாள் ஒன்றுக்கு 9800 நடைகள் தண்ணீர், லாரிகள் மூலம் சப்ளை செய்யப்பட்டுவருகிறது.
இதை மேலும் அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் நான்கு ஏரிகளும் வறண்ட நிலையில் மக்களுக்கு தண்ணீர் கொடுக்கிறோம். இதற்கு ஊடகங்கள் ஆதரவு வழங்க வேண்டும்.
கேள்வி : அமைச்சர்களுக்கு மட்டும் கேட்டவுடன் இரண்டு லாரி தண்ணீர் கிடைக்கிறதே ?
முதல்வர் பழனிசாமி : தவறான செய்தி. உங்களுக்கு எப்படி கிடைக்கிறதோ, அதே போல் எனக்கும், அமைச்சர்களுக்கும் கிடைக்கிறது.
தினமும் 20 லட்சம் லிட்டர் தண்ணீரை கேரளா தந்தால் நன்றாக இருக்கும். இது குறித்து கேரள முதல்வருக்கு கடிதம் எழுத உள்ளேன்- முதல்வர் பழனிசாமி.
கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், நிலத்தடி நீர், குவாரிகளில் எடுக்கும் நீர் ஆகியவற்றை சேகரித்து தண்ணீர் வழங்கி வருகிறோம்-முதல்வர் பழனிசாமி.
No comments:
Post a Comment