அனந்தசரஸ் குளத்தில் இருந்து 📆40 ஆண்டுகளுக்குப்பின் அதிகாலை வெளியே வந்தார் 🗿அத்திவரதர்👍 - Agnipuratchi

அனந்தசரஸ் குளத்தில் இருந்து 📆40 ஆண்டுகளுக்குப்பின் அதிகாலை வெளியே வந்தார் 🗿அத்திவரதர்👍

Share This

வைணவ தலங்களில் 🌎உலகப் புகழ் பெற்ற 🏛காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் 🙏கோயில், பல்வேறு சிறப்புகளை பெற்றுள்ளது🎉. இக்கோயில் மூலவர் வரதராஜ பெருமாளை, 3 ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளனர்😯. முற்காலத்தில் இந்த கோயிலில் மூலவராக இருந்த, ஆதி அத்தி வரதர், கோயில் வளாகத்தில் உள்ள 🌊அனந்த சரஸ் என்ற குளத்தில், தண்ணீருக்கு அடியில் எழுந்தருளி உள்ளார்🙂. இவர், 📆40 வருடங்களுக்கு ஒருமுறை, மேலே வந்து, 24 நாட்கள் சயன கோலத்திலும் 24 நாட்கள் நின்ற கோலத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்🙏. கடந்த 📆1939 மற்றும் 79ம் ஆண்டுகளில் மிகவும் விமரிசையாக நடந்த இந்த உற்சவத்தை காண👀 தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான 👥பக்தர்கள் வந்து அத்தி வரதரை தரிசனம் செய்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு அத்திவரதர் வைபவம் 📆ஜூலை 1ம் தேதி தொடங்குகிறது👍. இதையொட்டி நேற்று அதிகாலை ⌚2.40 மணியளவில் அத்திவரதர் குளத்தில் இருந்து வெளியில் வந்தார். இதைதொடர்ந்து ஆதி அத்திவரதர் 🗿சிலை சுத்தம் செய்யப்பட்டு, லாகு கும்பாபிஷேகம் செய்து, ஹோமம் வளர்த்து திருமஞ்சனம், விஸ்வரூபம், அலங்காரம் ஹோமம் வனத்து உள்ளிட்ட பூஜைகள் செய்து, 📆1ம் தேதி காலை 5 மணிமுதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages