7 தமிழர்களை விரைந்து விடுதலை செய்யக்கோரி ஆளுனர், முதலமைச்சருக்கு பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா கடிதம் - Agnipuratchi

7 தமிழர்களை விரைந்து விடுதலை செய்யக்கோரி ஆளுனர், முதலமைச்சருக்கு பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா கடிதம்

Share This

இராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்   தண்டனை விதிக்கப்பட்டு     29 ஆண்டுகளாக  சிறைகளில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை  விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அமைச்சரவையின் பரிந்துரை மீது ஆளுனர் உடனடியாக நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று  தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித்துக்கு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா கடிதம் எழுதியுள்ளார். அதன் நகல் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தின் விவரம் வருமாறு:

His  Excellency the Governor of Tamil Nadu Panwarilal Purohit,

Subject:  Request for release of 7 Tamils   who have been serving life imprisonment in prison for 29 years, Based on the resolution passed by Council of Ministers of the Tamil Nadu for their release
I appeal to Your Excellency the Honourable Governor of the State of Tamil Nadu and to draw your attentionwith regard to the long-term demand of the people of Tamil Nadu and the recommendation made by The State Government of Tamil Nadu on humanitarian grounds.

In the case of former Prime Minister Shri Rajiv Gandhi’s murder, Perarivalan, Murugan, Shanthan, Nalini, Robert Baias, Ravichandran and Jayakumar are all the 7 persons sentenced to capital punishment and subsequently the sentence was commuted to life imprisonment. All of them have been imprisoned from 1991.
Generally in practice, life imprisonment is calculated as 14 years of imprisonment and those who completes the said 14 years of entire sentence period are released. In various special cases, life imprisonment prisonersare released on the birth anniversary of leaders, the Indian Independence Day and the Republic Day on the basis of their good conduct during the sentence period, in spite of them spending much lesser than their 14 years of sentence. I would like to invite your attention that recently, subsequent to Your Excellency’s commutation order, nearly 1,500 people were released after completion of 10 years of their imprisonment on the Centenary Birth anniversary  of Late Dr M G Ramachandran, former Chief Minister of Tamil nadu. Similarly, in many cases life imprisonment prisoners have been released much before their completion of their sentence period on the grounds of good conduct.
The similar privilege should have been granted to all the 7 Tamils imprisoned for life in Shri Rajiv Gandhi’s assassination case for 29 years on a humanitarian basis.  But even after 28 years of their imprisonment, they did not get the chance to breathe the free air.  Once the Honourable Supreme Court of India, commuted the death sentence of three persons including Perarivalan to life imprisonment on 18th February 2014, the Government of Tamil Nadu,  the very next day, took steps to release them, but it failed, due to the then Union Government’s opposition.
Since then, four and a half years long time period has passed, after a series of Litigation in The Honourable Supreme Court of India, various steps to get clarifications and also the adjudication of this case by a Constitutional Bench. Subsequently, the Honourable Supreme Court of India, on September 6, 2018, through its judgment, stated that The Governor of Tamilnadu has the complete authority under the Indian Constitution to commute the sentence and release the        7 Tamils who are imprisoned for life.  Thereafter, the Tamil Nadu Cabinet, on September 9th, recommended the release of 7 Tamils  exercising the power given under Article 161 of the Indian Constitution, to The Governor of Tamilnadu. It is sad that no decision had been taken yet, upon the above said recommendationtill today, even after 276 days.
It is a well-known fact as acknowledged by everyone that the Honourable Governor of Tamilnadu has independent power under the Indian Constitution and it has been appropriately reiterated and reconfirmed by the Honourable Supreme Court of India, recently in an another case stating that the Governor of Tamil Nadu shall decide independently in this matter. Despite the recent judgment of the Honourable Supreme Court of India, it is very difficult to comprehend the rationale behind the Honourable Governor’s indecisiveness in the issue regarding the release of the                    7 Tamils.
There is no legal restrictions or limitations to release of 7 tamils, and the Honourable Governor of Tamil Nadu has independentpowers in this regard, and the Tamilnadu State Government Cabinet has appropriately recommended for the release of 7 tamils, and the whole of Tamil Nadu is eagerly awaiting for the release of 7 Tamils. Inspite of all the above mentioned facts and circumstances favouring  for the release of 7 Tamils, one fails to understand the hesitation shown by the Honourable Governor of Tamilnadu to decide upon this issue
Your Excellency, the Honourable Governor of Tamilnadu is a well-known literarian and you are well aware and can empathise with human love and his/her longing for love. I am sure that Your Excellency shall empathise a mother’s excruciating mental agony in search of her child who failed to return home after he gone out to play. But here, one mother with a strong belief about her son’s innocence and with a hope that he did not commit any wrong, provided him into custody of CBI authorities 28 years back for the Rajiv Gandhi assassination investigation, still longs for her son’s home coming. Another mother is unable to show her love and affection to her daughter, whom she gave birth in prison and gave away to be taken care by her relatives living abroad. I strongly hope Your Excellency shall empathise with these tragedies as a family head.
Person like Perarivalan have done nothing wrong; every one of us know that they were punished based on fabricated confession statement.  Nevertheless, none of the above said 7 Tamils  have been requested to be released as innocent.  The whole of Tamil Nadu appeals and pleads to Your Excellencyto release all the above said 7 Tamilson compassionate and mercy grounds, as they have undergone more years of imprisonment than the period of the life sentence in practice.  Therefore, I kindly urge and request Your Excellency to grant an order for the immediate release of the above said 7 Tamils  based on the recommendation made to you by the State Government of Tamil Nadu’s Cabinet decision, without any further delay.

கடிதத்தின் தமிழாக்கம்

மேதகு தமிழக ஆளுனர் பன்வாரிலால் அவர்களுக்கு,

பொருள்: 29 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களை தமிழக அமைச்சரவைத் தீர்மானத்தின் அடிப்படையில் விடுதலை செய்யக் கோருதல் - தொடர்பாக
தமிழ்நாட்டு மக்களின் நீண்டநாள் கோரிக்கை மற்றும் தமிழக அமைச்சரவையின் மனிதநேய அடிப்படையிலான பரிந்துரை  குறித்து தங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்த கோரிக்கை மனுவை மேதகு தமிழக ஆளுனராகிய தங்களின் பார்வைக்கு முன்வைக்கிறேன்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேருக்கு தொடக்கத்தில் தூக்கு தண்டனை விதிக்கப் பட்டு, பின்னர் பல்வேறு காலகட்டங்களில் ஆயுள் தண்டனையாக குறைக்கப் பட்டது. இவர்கள் அனைவரும் 1991-ஆம் ஆண்டு முதல் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

பொதுவாக வாழ்நாள் சிறை தண்டனை என்பது நடைமுறையில் 14 ஆண்டுகள் என்றே கணக்கிடப் பட்டு, தண்டனைக் காலத்தை கழித்தவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர். தலைவர்களின் பிறந்த நாள்கள், இந்திய விடுதலை நாள், குடியரசு நாள் உள்ளிட்ட சிறப்பு நிகழ்வுகளில் குறைந்த காலமே தண்டனை அனுபவித்த வாழ்நாள் சிறைதண்டனை கைதிகள் கூட நன்னடத்தையின் அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்யப்படுகின்றனர். அண்மையில் கூட மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் நூற்றாண்டையொட்டி 10 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறைவு செய்த சுமார் 1500 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அதற்கான உத்தரவில் தாங்கள் தான் ஆணையிட்டீர்கள். இதேபோல் பலகட்டங்களில் ஆயுள் தண்டனை கைதிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 29 ஆண்டுகளாக சிறைகளில்  வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களுக்கும் இந்த சலுகை மனிதநேய அடிப்படையில் வழங்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால், 28 ஆண்டுகள் முழுமையாக சிறை தண்டனையை அனுபவித்து முடித்த பிறகும் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கவில்லை. பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்கு தண்டனை கடந்த 2014-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆயுள் தண்டனையாக  குறைக்கப்பட்டது. அதற்கு அடுத்த நாளே அவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டது, ஆனால், மத்திய அரசின் எதிர்ப்பு காரணமான அது கைகூடவில்லை.

7 பேர் விடுதலை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள், விளக்கம் கேட்கும் நிகழ்வுகள், அரசியலமைப்பு சட்ட அமர்வின் விசாரணை என நான்கரை ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில்,  7 தமிழர்கள் விடுதலை தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 6 -ஆம் தேதி அளித்தத் தீர்ப்பில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய மாநில ஆளுனருக்கு அதிகாரம் உண்டு என்று ஆணையிட்டது. அதைத் தொடர்ந்து செப்டம்பர் 9-ஆம் தேதி கூடிய தமிழக அமைச்சரவை, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 161&ஆவது பிரிவின்படி அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி 7 தமிழர்களையும்  விடுதலை செய்யும்படி தங்களுக்கு பரிந்துரை செய்தது. ஆனால், அந்த பரிந்துரை தங்களுக்கு அனுப்பப்பட்டு இன்றுடன் 276 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இன்று வரை அதன்மீது எந்த முடிவையும் தாங்கள் எடுக்காதது வருத்தமளிக்கிறது.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்யும் விஷயத்தில் தங்களுக்கு கட்டற்ற அதிகாரம் உள்ளது என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். இதை உச்சநீதிமன்றமும் அண்மையில் உறுதி செய்ததுடன், இந்த விஷயத்தில் தமிழக ஆளுனர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என்றும் ஆணையிட்டது. உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து ஒரு மாதத்திற்கு மேலாகி விட்ட போதிலும்     7 தமிழர்கள் விடுதலை குறித்து தாங்கள் முடிவெடுக்காததன் நியாயத்தை புரிந்துகொள்ள முடியவில்லை.

7 தமிழர்கள் விடுதலைக்கு சட்டப்படியாக எந்தத் தடையும் இல்லை, அது குறித்து முடிவெடுக்க தமிழக ஆளுனராகிய தங்களுக்கு அனைத்து அதிகாரங்களும் உள்ளன, 7 தமிழர்களை விடுதலை செய்ய மாநில அமைச்சரவை பரிந்துரைத்துள்ளது, ஒட்டுமொத்த தமிழகமும் 7 தமிழர்களின் விடுதலையை ஆவலுடன் எதிர்பார்க்கிறது. 7 தமிழர்கள் விடுதலைக்கு ஆதரவாக இவ்வளவு அம்சங்கள் இருக்கும் நிலையில், இந்த விஷயத்தில் முடிவெடுக்க ஆளுனராகிய தாங்கள் தயங்குவது ஏன்? எனப் புரியவில்லை.

தமிழகத்தின் ஆளுனராகிய நீங்கள் தலைசிறந்த இலக்கியவாதியும் ஆவீர்கள். மனித அன்பையும், அன்புக்கான ஏக்கத்தையும் புரிந்து கொள்ளும் சக்தி உங்களுக்கு உண்டு. விளையாடச் சென்ற குழந்தை குறித்த காலத்தில் திரும்பி வராவிட்டால் அக்குழந்தையின் தாய் எவ்வாறு துடித்துப் போவாள் என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். ஆனால், இங்கு ஒரு தாய் தமது மகன் எந்த தவறும் செய்யவில்லை என்ற நம்பிக்கையில், ராஜிவ்காந்தி கொலைவழக்கு விசாரணைக்காக 28 ஆண்டுகளுக்கு முன் தமது மகனை சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டு, இப்போது வரை மகனின் வருகைக்காக வழி மீது விழி வைத்து காத்திருக்கிறார். இன்னொரு தாய் சிறையில் பெற்றெடுத்த மகளை வெளிநாட்டில் குடும்பத்தினரிடம் ஒப்படைத்து விட்டு, இன்று வரை நேரில் சந்தித்து கொஞ்சி மகிழ முடியாமல் தவிக்கிறார். இந்த துயரங்களை ஒரு குடும்பத் தலைவராக புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

பேரறிவாளன் போன்றவர்கள் எந்தத் தவறும் செய்யவில்லை; திரிக்கப்பட்ட வாக்குமூலத்தால் தான் அவர்கள் தண்டிக்கப்பட்டார்கள் என்பது பலருக்கும் தெரியும். இருப்பினும், 7 தமிழர்களையும் குற்றமற்றவர்கள் என்று கூறி விடுதலை செய்யும்படி யாரும் கோரவில்லை. அவர்கள் அனுபவிக்க வேண்டிய தண்டனையை விட அதிகமாக சிறைவாசம் அனுபவித்து விட்ட நிலையில், கருணை அடிப்படையில் விடுதலை செய்யுங்கள் என்று தான் ஒட்டுமொத்த தமிழகமும் உங்களை மன்றாடுகிறது. எனவே, இனியும் தாமதிக்காமல் தமிழக அமைச்சரவைத் தீர்மானத்தின் அடிப்படையில் 7 தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய உரிய ஆணைகளை பிறப்பிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் முதலமைச்சர் கூறியிருக்கிறார்.
கடிதத்தின் நகல் ஆளுனர் மற்றும் முதலமைச்சர் அலுவலகங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages