பிளாஸ்டிக் உபயோகித்தால் நாளை முதல் 💸அபராதம் - தமிழக 🏛அரசு - Agnipuratchi

பிளாஸ்டிக் உபயோகித்தால் நாளை முதல் 💸அபராதம் - தமிழக 🏛அரசு

Share This

சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக் பொருட்களுக்கு 🚫தடை விதித்து தமிழக அரசு கடந்த ஜனவரி 📆மாதம் உத்தரவு பிறப்பித்தது. கடந்த ஜனவரி 1ம் 📆தேதி முதல் இந்த தடை அமலுக்கு வந்த நிலையில், பல்வேறு கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த சில வாரங்களாக பிளாஸ்டிக் பயன்பாடு மீண்டும் 👥பொதுமக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், பிளாஸ்டிக் பொருட்களை உபயோகித்தால் அவர்களுக்கு 💸அபராதம் விதிக்கும் நடைமுறை நாளை முதல் தமிழகத்தில் அமலுக்கு வருகிறது. அதன்படி, வணிக ரீதியாக பயன்படுத்தும் பெரிய கடைக்காரர்களுக்கு ரூ.25 💸ஆயிரம் முதல் கட்டமாகவும், இரண்டாம் கட்டமாக ரூ. 50 💸ஆயிரம் வரையிலும், சிறிய கடைக்காரர்களுக்கு முதல் முறை ரூ.100, இரண்டாம் முறை ரூ.200, மூன்றாம் முறை ரூ.500 என்ற விகிதத்தில் வசூலிக்கப்படும் என்று 🎙தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages