நிரவ் மோடியின் 🏦வங்கி கணக்குகளை முடக்கியது🚫 சுவிட்சர்லாந்து 🏛அரசு. - Agnipuratchi

நிரவ் மோடியின் 🏦வங்கி கணக்குகளை முடக்கியது🚫 சுவிட்சர்லாந்து 🏛அரசு.

Share This

குஜராத்தை சேர்ந்த பிரபல 💎வைர வியாபாரி நிரவ் மோடி, மும்பையில் உள்ள 🏦பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் சுமார் 💰ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டுக்கு தப்பினார். இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை🗣 நடத்தினர். இந்த நிலையில் நிரவ் மோடி ✈லண்டனில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, 🇮🇳இந்திய அரசு எடுத்த நடவடிக்கையின் பேரில் நிரவ் மோடியை லண்டன் 👮போலீசார் கடந்த 📆மார்ச் 19ந் தேதி கைது⛓ செய்து சிறையில் அடைத்தனர். அவரை ஜாமீனில் விட லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் 🏛நீதிமன்றமும் மறுத்து விட்டது❌. இதற்கிடையே, ✈சுவிட்சர்லாந்தில் உள்ள நிரவ் மோடி மற்றும் அவரது சகோதரி 👩பூர்வி மோடிக்கு சொந்தமான 4 🏦வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது😯. மத்திய அரசின் 🏛கோரிக்கையை ஏற்று 💰ரூ.283.16 கோடியை சுவிட்சர்லாந்து அரசு முடக்கியது🚫. முன்னதாக, நிரவ் மோடி மற்றும் அவரது சகோதரிக்கு சொந்தமான வங்கி கணக்குகளில் 💸கருப்பு பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை புகார் அளித்தது👍 குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages