ЁЯХНроЕрод்родிро╡ро░родро░ை роиாро│ை рооுродро▓் рокроХ்родро░்роХро│் ЁЯЩПродро░ிроЪிроХ்роХ роПро▒்рокாроЯு - Agnipuratchi

ЁЯХНроЕрод்родிро╡ро░родро░ை роиாро│ை рооுродро▓் рокроХ்родро░்роХро│் ЁЯЩПродро░ிроЪிроХ்роХ роПро▒்рокாроЯு

Share This

காஞ்சிபுரத்தில் சுமார் 1⃣5⃣0⃣0⃣ ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ வரதராஜப் பெருமாள் 🕍கோயில் உள்ளது. இது 108 திவ்ய தேசங்களில் ஒன்று. இக்கோயிலின் ராஜகோபுரம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. மூலவராக வரதராஜப்பெருமாளும் பெருந்தேவி தாயாரும் உள்ளனர். இத்தலம் அத்திகிரி என்றும் 🗣அழைக்கப்படுகிறது. இக்கோயிலின் மிகச்சிறப்பாகப் போற்றப்படுவது அனந்தசரஸ் திருக்குளத்தின் உள்ளே வீற்றிருக்கும் ஆதி அத்தி வரதர். இவரை 4⃣0⃣ ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே 👥பக்தர்கள் தரிசிக்க முடியும்.

இந்நிலையில் 40 ஆண்டுகளுக்குப் பின் பக்தர்களுக்குக் 👥காட்சியளிக்க உள்ள அத்தி வரதர், நாளை/ஜூலை 1ம் 📆தேதியில் இருந்து ஆகஸ்ட் 17ம் தேதி வரை சயனக்கோலம் மற்றும் நின்ற கோலத்தில் அருள்பாலிக்க உள்ளார். இதனையடுத்து 🌍உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் காஞ்சிபுரத்தை நோக்கிப் படையெடுக்கத் தயாராகி வருகின்றனர். இதற்கு முன் கடந்த 1979ம் ஆண்டு 🎉இந்நிகழ்ச்சி நடைபெற்றபோது சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றதாகக் 🗣கூறப்படுகிறது.

*இந்த விழாவை முன்னிட்டு 🚍பேருந்து போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.* அதன்படி, சென்னை, திருவள்ளூர், திருத்தணி, திருப்பதி, ஓசூர், பெங்களூர் ஆகிய ஊர்களுக்கு செல்லும் மற்றும் வந்தடையும் பேருந்துகள் ஒலிமுகமது பேட்டை தற்காலிக 🚌பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி, திண்டிவனம, திருச்சி, புதுச்சேரி, திருவண்ணாமலை ஆகிய ஊர்களுக்கு செல்லும் மற்றும் வந்தடையும் பேருந்துகள் ஓரிக்கை 🏗பணிமனை எதிர் அமையும் தற்காலிக பேருந்து நிறுத்தத்தில் இருந்து புறப்படும். மேலும் நகர பேருந்துகள் அனைத்தும் வழக்கம் போல ✅இயக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages