இந்தி கட்டாயம் இல்லை🚫' என்ற புதிய ✍திருத்தப்பட்ட கல்விக்கொள்கை வரைவுத்திட்டம் வெளியீடு👍 - Agnipuratchi

இந்தி கட்டாயம் இல்லை🚫' என்ற புதிய ✍திருத்தப்பட்ட கல்விக்கொள்கை வரைவுத்திட்டம் வெளியீடு👍

Share This

புதிய தேசிய கல்வி கொள்கையை வரையறுப்பது குறித்து ஆராய டாக்டர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்து இருந்தது. இக்குழு தனது அறிக்கையினை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியாலிடம் கடந்த  📆31ம் தேதி சமர்ப்பிக்கப்பட்டு, அதில் மும்மொழி கொள்கை பின்பற்றப்பட வேண்டும்😳 என்று பரிந்துரை🗣 செய்யப்பட்டுள்ளது. இந்த பரிந்துரை, தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பை😡 உருவாக்கிய நிலையில், ✍திருத்தப்பட்ட வரைவு 📚கல்விக்கொள்கை 🏛மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி கட்டாயம் பயில வேண்டும் என்பது நீக்கப்பட்டுள்ளது👍. விருப்பத்தின் அடிப்படையில் 3-வது மொழியை மாணவர்களே தேர்வு செய்யலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது📣. இதன்மூலம், 🏛தமிழகத்தில் 👥மாணவர்கள் தங்களுக்கு விருப்பப்பட்ட ஏதேனும் ஒரு மொழியை தேர்வு செய்து படிக்கலாம்👌 என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages