வேலூரில் கால்வாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு 🗣விசாரணையின் போது, சென்னை நகரில் குடிநீர் பிரச்னையை போக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவான 📜அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் ✍உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று பதில் 📜மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை படித்து பார்த்த ⚖நீதிபதிகள் தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண இதுவரை எடுத்த நடவடிக்கைகள், ஏரி, 🌊குளங்களை தூர்வாரவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் எடுத்த நடவடிக்கைகள், 🌨மழை நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க மேற்கொண்ட நடவடிக்கைகள், சென்னைக்கு 🚰குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டு வந்த நிலையில் மாற்று ஏற்பாட்டிற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என பல கேள்விகளை❓ எழுப்பினர்.
மேலும் நீர் மேலாண்மை நடவடிக்கையில் அரசு உரிய நடவடிக்கை 🤷♂எடுக்கவில்லை என கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், இந்த விஷயத்தில் அரசின் நடவடிக்கை பூஜ்ஜியமாக உள்ளதாகவும் 🎙தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு அகற்றம், தூர்வார எடுத்த நடவடிக்கைகள் குறித்து 📜அறிக்கை தாக்கல் செய்யவும், அனைத்து மாவட்ட 💺ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பவும் பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வருகின்ற 27ம் 📆தேதிக்கு ஒத்திவைத்தனர்.
No comments:
Post a Comment