தமிழ்நாட்டில், சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி உள்ளிட்ட 14 மாநகராட்சிகள் உள்ளது. இதனிடையே திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட, ஆவடி நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்தி அறிவிக்க 🗣கோரிக்கை நீண்டநாட்களாக இருந்து வந்தது. இந்நிலையில், தமிழ்நாடு 🏛அரசு, ஆவடியை புதிய மாநகராட்சியாக அறிவித்து 📜அரசாணை வெளியிட்டிருக்கிறது. அதன்படி தமிழ்நாட்டின், 15வது மாநகராட்சியாக, ஆவடி நகராட்சி 📣அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆவடி மாநகராட்சியில் ஆவடி, பூந்தமல்லி, திருவேற்காடு நகராட்சிகளும், திருநின்றவூர் பேரூராட்சியும் வரும்.
நெமிலிச்சேரி, நசரத்பேட்டை உள்பட 11 கிராம பஞ்சாயத்துகளும் ஆவடி மாநகராட்சிக்குள் வரும்.
அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியதவுது 5.2 லட்சம் மக்கள் தொகையுடன் 48 வார்டுகள் கொண்ட ஆவடி நகராட்சி மட்டுமே மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுகிறது
இதற்காக முதல்வர், துணை முதல்வர், உள்ளாட்சித் துறை அமைச்சர் ஆகியோருக்கு ஆவடி மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று - மாஃபா பாண்டியராஜன் கூறினார்.
No comments:
Post a Comment