புதுச்சேரி முன்னாள் முதல்வர் ஜானகிராமன் உடல்நலக்குறைவால் புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனையில்🏥 அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்😞
திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினராகவும், நான்கு வருடங்கள் (1996-2000) புதுச்சேரி முதல்வராகவும் இருந்தவர் ஆர்.வி. ஜானகிராமன்.
நேற்று முன்தினம் திமுக மகளிரணித்👩 தலைவரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி எம்.பி. புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆர்.வி. ஜானகிராமனிடம் உடல் நலம் விசாரித்து விட்டுச் சென்றார்.
இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை மருத்துவமனையில் காலமானார்.
No comments:
Post a Comment