அறுவை சிகிச்சை மையத்தில் 👤நோயாளிக்கு பாலியல் 😳தொல்லை - Agnipuratchi

அறுவை சிகிச்சை மையத்தில் 👤நோயாளிக்கு பாலியல் 😳தொல்லை

Share This

கடந்த 5ம் 📅தேதி இடது கால் மூட்டு வலி காரணமாக மேற்கு வங்கத்தை சேர்ந்த செளமிதா போஸ் என்பவர் சென்னை பெருங்குடி 🏥அப்பல்லோவில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். அவரை பறி சோதித்த மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து அறுவை சிகிச்சைக்காக மயக்க மருந்து செலுத்தப்பட்டிருந்த நிலையில், அங்கிருந்த 👤ஊழியா் ஒருவா் அவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அவர் 🗣புகார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து 🏥மருத்துவமனையில் இருந்த கண்காணிப்பு 📹கேமராக்களை ஆய்வு செய்து பாா்த்ததில் குற்றம் நடைபெற்றது உறுதிசெய்யப்பட்டுள்ளது. குற்றம் உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து மருத்துவமனை பணியாளா் டில்லி பாபுவை 👮‍♂காவல் துறையினா் ⛓கைது செய்துள்ளனா். முன்னதாக காவல் உதவி 👀ஆய்வாளரிடமும் அந்த பெண்ணுக்கு மன நிலை சரியில்லை, அதனால் சிகிச்சை அளித்து வருகிறோம் என்ற அடிப்படையில் 🗣பேசி மருத்துவமனை நிர்வாகம் புகாரை 🙄மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages