சட்டமன்ற 💺உறுப்பினரை வெள்ளைத்தாளில் ✍உறுதிமொழி வழங்க வைத்த 👥மாணவர்கள் - Agnipuratchi

சட்டமன்ற 💺உறுப்பினரை வெள்ளைத்தாளில் ✍உறுதிமொழி வழங்க வைத்த 👥மாணவர்கள்

Share This

தமிழகம் முழுவதும் 2017-18ஆண்டில் கல்வி பயின்ற 👥மாணவர்களுக்கு விலையில்லா 💻மடிக்கணினி வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து பல இடங்களில் 🗣போராட்டங்கள் நடந்து வரும் வேளையில் மானாமதுரையில் 2018-19, 2019-20 ஆகிய கல்வி ஆண்டில் பயிலும் மாணவர்களுக்கு நேற்று மடிக்கணினி வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் இந்த விழா ❌ரத்து செய்யப்பட்டது. ஆனால், அருகில் உள்ள அரசு 🏫பள்ளியில் அதிமுக எம்.எல்.ஏ நாகராஜன் கலந்து கொண்டு மடிக்கணினிகளை வழங்கிவிட்டு மானாமதுரை 🚙புறப்பட்டார். 
இதனையடுத்து, எம்.எல்.ஏ நாகராஜன் காரை மறித்து 👥பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து, 2017-18 கல்வியாண்டில் படித்த மாணவர்களுக்கு 💻மடிக்கணினி வழங்காமல் அடுத்த கல்வியாண்டில் படித்த (2018-19, 2019-20) மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கமாட்டேன் என வெள்ளை 📋பேப்பரில் எழுதி பச்சை மை பேனாவால் ✍கையெழுத்திட்டு எம்.எல்.ஏ நாகராஜன் மாணவர்களிடம் வழங்கினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages