கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி மூவர் பலி😟 - Agnipuratchi

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி மூவர் பலி😟

Share This

🏛கோவையை அடித்த கீரநத்தம் பகுதியில் சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான வெண்பன்றி வளர்ப்பு கூடம் உள்ளது😯. அந்த கூடம் அருகே, 10 அடி ஆழமும் 16 அடி நீளமும் கொண்ட கழிவுநீர் தொட்டியில், வெண்பன்றிகளின் கழிவுகள் கொட்டப்பட்டுவருகிறது🙄. இதையடுத்து, இன்று காலை கோவை இடையர்பாளையத்தை சேர்ந்த 👤ராசப்பன் உள்ளிட்ட 3 பேர் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்😐. முதலில் 👤ராசப்பன் 10 அடி ஆழமுள்ள தொட்டிக்குள் இறங்கி கழிவுகளை சுத்தம் செய்ய தொடங்கினார்😐. அப்போது விஷவாயு தாக்கி அவர் மயக்கமடைந்து தொட்டிக்குள் விழுந்துள்ளார்😱. அவரை காப்பாற்றுவதற்காக 👤ராசப்பனுடன் வந்த 2 பேரும் உள்ளே இறங்க, அவர்களும் விஷவாயு தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்😟. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த😨 பண்ணை ஊழியர்கள் அவர்களை மீட்க முயன்றனர். ஆனால் அவர்களையும் விஷவாயு தாக்கி விடுமோ என்ற அச்சத்தில் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபடவில்லை🚫. இதையடுத்து 🚒தீயணைப்பு துறையினருக்கு இது தொடர்பாக தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி இறந்துபோன ராசப்பன் உள்ளிட்ட 3 பேரின் சடலங்களை மீட்டனர். தற்போது அவர்களின் உடல்களை 🏛கோவை 🏥அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கோவில்பாளையம் 👮போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை🗣 நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages