கொல்கத்தா என்.ஆர்.எஸ். 🏥மருத்துவமனையில் நோயாளி ஒருவர் இறந்ததைத் தொடர்ந்து, கடந்த திங்களன்று மருத்துவமனைக்குள் புகுந்த 👥கும்பல், இளநிலை :male-doctor:மருத்துவர்கள் இருவரைத் தாக்கியது. இதையடுத்து தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இளநிலை பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அவர்களுக்கு ஆதரவாக 🇮🇳நாடு தழுவிய அளவில் நாளை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக :female-doctor:மருத்துவர்கள் 📣அறிவித்தனர்.
இதனை தொடர்ந்து இதுவரை 700க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ராஜினாமா 📜கடிதங்களைக் கொடுத்துள்ளதால் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் நிலைமை 😧பரிதாபகரமாக உள்ளது. இதனிடையே :female-doctor:மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தைக் கைவிடக் கோரி மேற்குவங்க ஆளுநர் திரிபாதி, 💺முதலமைச்சர் மம்தா ஆகியோர் வேண்டுகோள் விடுத்தும் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை 🗣போராட்டம் தொடரும் என்று மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment