மேயர் கொலை வழக்கில் கைதான 👨கார்த்திகேயனுக்கு 📆ஆகஸ்ட் 14 வரை சிறை⛓ - Agnipuratchi

மேயர் கொலை வழக்கில் கைதான 👨கார்த்திகேயனுக்கு 📆ஆகஸ்ட் 14 வரை சிறை⛓

Share This

🏛திருநெல்வேலி மாவட்ட முதல் 👵பெண் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் 👴முருகசங்கரன், இவர்கள் வீட்டு 👩பணிப்பெண் மாரி ஆகியோர் கடந்த 📆23ம் தேதி படுகொலை செய்யப்பட்டனர்😟. இந்த வழக்கில் 🌞திமுக மாநில ஆதிதிராவிடர் நலப்பிரிவு இணைச் செயலாளர் 👵சீனியம்மாளுக்கு தொடர்பு இருப்பதாக 👮காவல் துறையினர் சந்தேகித்த🤔 நிலையில் அவரது மகன் 👨கார்த்திகேயனை கைது⛓ செய்து விசாரணை🗣 மேற்கொண்டனர். இதில் தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்ட 👨கார்த்திகேயன், "எனது தாயாரின் அரசியல் வளர்ச்சிக்கு தடையாக🚫 இருந்ததால் 👵உமா மகேஸ்வரியை 🔪கொலை செய்தேன்" என்று கூறியுள்ளார். இதனையடுத்து, நேற்று மாலை கார்த்திகேயனை உமா மகேஸ்வரியின் 🏡வீட்டிற்கு அழைத்துச் சென்ற காவல் துறையினர், கொலையை எப்படி செய்தார்⁉என நடித்து காண்பிக்க கூறியுள்ளனர். அவரும் நடித்து காட்ட, இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்ட அரசு 🏥மருத்துவமனையில் 👨கார்த்திகேயனுக்கு 💉மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் 🏛திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற நீதிபதி 👩நிஷாந்தினி வீட்டில் 👨கார்த்திகேயன் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, வருகின்ற 📆ஆகஸ்ட் 14ம் தேதி வரை சிறையில்⛓ அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்⚖.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages