🚀சந்திராயன்-2 விண்ணில் பாய்ந்தது🎊 - Agnipuratchi

🚀சந்திராயன்-2 விண்ணில் பாய்ந்தது🎊

Share This

🏛ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து கடந்த 📆திங்கள் கிழமை 🚀சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டிருந்தது😯. ஒருநாளுக்கு முன்னதாகவே கவுன்டவுன் தொடங்கப்பட்ட நிலையில் தொழில்நுட்ப கோளாறு😳 காரணமாக 🚀சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படுவதற்கு ⌚56 நிமிடங்கள் 24 விநாடிகள் மட்டுமே இருந்த நிலையில், கவுன்டவுன் திடீரென நிறுத்தப்பட்டது😟. இதனையடுத்து, தற்போது கோளாறு முழுமையாகச் சரி செய்யப்பட்டு இன்று ⌚மதியம் 2.43 மணிக்கு 🚀சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் ஏவப்படும்👍 என்று இஸ்ரோ அறிவித்தது🔈. அதன்படி, இன்று பிற்பகல் 2.43 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது🎉. இதற்கான 20 மணி நேர கவுன்ட் டவுன் நேற்று மாலை 6.43 மணிக்கு தொடங்கியது. 🚀சந்திரயான்-2 ஏவுவது காலதாமதமானதால், அதன் பயணத்தில் சில மாற்றங்களை இஸ்ரோ செய்துள்ளது🙄. முன்னதாக பூமியை 17 நாட்களுக்கு சுற்றுவதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அது 23 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது⏫ குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages