🏛ஜோலார்பேட்டையில் இருந்து 💦தண்ணீருடன் சென்னை வந்தது 2வது 🚆ரயில்👏 - Agnipuratchi

🏛ஜோலார்பேட்டையில் இருந்து 💦தண்ணீருடன் சென்னை வந்தது 2வது 🚆ரயில்👏

Share This

🏛சென்னை நகர மக்களின் 🚰குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்காக 🏛வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரெயில் மூலம் குடிநீர் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது👍. இதற்காக 💰ரூ.66 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அதன்படி கடந்த 📆12ந் தேதி ஜோலார்பேட்டையில் இருந்து 💦25 லட்சம் லிட்டர் தண்ணீர் 🚆ரெயில் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு 👥மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக 2வதாக 50 டேங்கர்கள் கொண்ட புதிய 🚆ரெயில் 🏛ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்டது. இந்த ரெயில் சேலம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு அதனை சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது😯. இதையடுத்து ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் 5-வது யார்டுக்கு அந்த ரெயில் நேற்று ⌚அதிகாலை 3 மணி அளவில் வந்தடைந்தது. அதன்பிறகு தயாராக இருந்த 👥45 ஊழியர்கள், டேங்கர்களில் தண்ணீர் நிரப்பும் பணியை மேற்கொண்டனர்🙂. அதிகாலை ⌚5.10 மணி முதல் காலை 8.10 மணி வரை 3 மணி நேரம் இந்த பணி நடந்தது😳. அதனை தொடர்ந்து, குடிநீர் தரம் ஆய்வு செய்யப்பட்டு காலை ⌚9.40 மணிக்கு ஜோலார்பேட்டையில் இருந்து ரெயில் புறப்பட்டது. இந்த 🚆ரெயில் நேற்று மதியம் ⌚2.15 மணிக்கு சென்னை வில்லிவாக்கம் ரெயில் நிலையம் வந்தடைந்தது🎉

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages