சுருக்கு வலை 🐠மீன்பிடிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து ⛵2 படகுகளில் 🔥தீ வைப்பு😳 - Agnipuratchi

சுருக்கு வலை 🐠மீன்பிடிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து ⛵2 படகுகளில் 🔥தீ வைப்பு😳

Share This

🏛கடலுார் மாவட்டம், பரங்கிப்பேட்டை 🌊கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த 🐠மீனவர்கள், அன்னங்கோவில் மீன் இறங்கு தளத்தில், 🐠மீன்களை 💸விற்பனை செய்வது வழக்கம். இங்கு, சுருக்கு வலையில் பிடிக்கப்படும் 🐠மீன்களை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு😡 தெரிவித்து, புதுப்பேட்டை, சாமியார்பேட்டை உள்ளிட்ட, 32 மீனவ கிராமத்தினர், விசைப்படகு உரிமையாளர்கள், தொடர்ந்து 💪போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இது தொடர்பாக, 18ம் தேதி நடந்த 🤔ஆலோசனை கூட்டத்தில், "அன்னங்கோவில் மீன் இறங்கு தளத்தில், சுருக்கு வலை மீன் விற்பனை தடை🚫 செய்யப்படும்" என 🐠மீன்வளத்துறை 🤵அதிகாரிகள் உறுதி👍 அளித்தனர். இதனால், சுருக்கு வலையில் 🐠மீன் பிடிப்பவர்கள், பரங்கிப்பேட்டை 🌊வெள்ளாற்று பாலம் அருகே, புதிதாக இடம் தேர்வு செய்து, 🐠மீன் விற்பனை செய்தனர்.இதனால், ஆத்திரம் அடைந்த, 👥32 மீனவ கிராமத்தினர், நேற்று, 🏛அன்னங்கோவில் வெள்ளாற்று முகத்துவாரத்தில் 💪போராட்டம் நடத்த, ⛵100க்கும் மேற்பட்ட படகுகளில் வந்தனர். அப்போது, எம்.ஜி.ஆர்., திட்டு பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரின் சுருக்கு வலை விசைப்படகு உட்பட, ⛵நான்கு படகுகளுக்கு 🔥தீ வைக்கப்பட்டது. இதில், நான்கு படகுகளும், முற்றிலுமாக எரிந்து சேதமாகின😟. இதனையடுத்து, இரு தரப்பு மீனவர்களும் மோதிக்கொள்ளும் சூழல் ஏற்பட்டது😱. இது குறித்து 📲தகவலறிந்த, டி.எஸ்.பி.,கார்த்திகேயன் மற்றும் போலீசார், படகில் சென்று, இரு தரப்பையும் சமாதானம் செய்து, அனுப்பினர்😌. அப்பகுதியில் தற்போது பாதுகாப்பு கருதி 👮போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages