இங்கிலாந்து லார்டஸ் மைதானத்தில் நடைபெற்ற 🏆உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 2⃣ அணிகள் 241 ரன்கள் எடுத்து ஆட்டம் 🙄சமனில் முடிந்தது. இதையடுத்து சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. ஆனால் சூப்பர் ஓவரும் 😳டிரா ஆனது. இதையடுத்து அதிக 4⃣ பவுண்டரிகள் அடித்த அணி என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணி 🏆உலகக் கோப்பையை வென்றது. இந்நிலையில், இந்த பவுண்டரி முறை குறித்து பிரபலங்கள் பலர் 🗣விமரிசித்து வருகின்றனர்.
அதன்படி, பாலிவிட் நடிகர் ⭐அமிதாப் பச்சன், உன்னிடம் (ஐசிசி) ஒரு 2000 ரூபாய் 💵நோட்டு இருக்கிறது, என்னிடம் 4⃣ 500 ரூபாய் 💸நோட்டு இருக்கிறது, நம்மில் 🤷♂யார் பணக்காரர் என்று கேட்க, அதற்கு ஐசிசி நான்கு 500 ரூபாய் நோட்டு வைத்துள்ள நீங்கள் தான் பணக்காரர் என்று ஐசிசி சொல்வது போல் ✍ட்வீட் செய்துள்ளார். இதேபோல் 🏏கிரிக்கெட் வீரர் ப்ரட் லீ, "உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து அணிக்கு 💐வாழ்த்துகள். யார் வெற்றி பெற்றது என்பதை 😇தீர்மானிக்க இது ஒரு பயங்கரமான வழி. இந்த விதி 🙅♂மாற வேண்டும்" என்று ✍ட்வீட் செய்துள்ளார். இவரை போலவே 🇮🇳இந்திய கிரிக்கெட் வீரர் யுவ்ராஜ் சிங், "இந்த விதிகளில் எனக்கு 🤷♂உடன்பாடில்லை. ஆனால் ஐசிசியின் விதிகளை மதித்து இங்கிலாந்து அணிக்கு 💐வாழ்த்துகள்" என ✍ட்வீட் செய்துள்ளார்.
No comments:
Post a Comment