🏛வேலூர் தொகுதி 🗳தேர்தல் பயிற்சி வகுப்பு-வேலூர் 💺கலெக்டர் அறிக்கை🗣 - Agnipuratchi

🏛வேலூர் தொகுதி 🗳தேர்தல் பயிற்சி வகுப்பு-வேலூர் 💺கலெக்டர் அறிக்கை🗣

Share This

🏛வேலூர் தொகுதி 🗳தேர்தல் சிறப்பு பயிற்சி வகுப்பு குறித்து வேலூர் 💺கலெக்டர் சண்முகசுந்தரம் சமீபத்தில் ஓர் அறிக்கையினை📜 வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "🏛வேலூர் தொகுதி பாராளுமன்ற 🗳தேர்தல் வருகிற 📆5ந்தேதி நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து 👆வாக்குச் சாவடியில் பணிபுரிவதற்கான வாக்குச்சாவடி 🤵அலுவலர்கள் மொத்தம் 7557 ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு, தேர்தல் பணி நியமன ஆணைகள்📄 வழங்கப்பட்டு நேற்று முன்தினம் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது😯. வாக்குச்சாவடி அலுவலர்கள் வழங்கிய 📲செல்போன் வாயிலாக ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு தொடர்பாக குறுஞ்செய்திகள் அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் இதில் 1233 பேர் கலந்து கொள்ளவில்லை🙄. இதனால் அவர்களுக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் விளக்கம்🗣 கோரும் குறிப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது😳" என்று கூறினார். மேலும் அவர், "இருப்பினும் இவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக 📆18ந் தேதி சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்திட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது👍. இதற்கான ஆணைகள்📜 இன்று வழங்கப்பட்டன. இந்த சிறப்பு வகுப்புகளிலும் கலந்து கொள்ளாதவர்கள் மீது 👥மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் கட்டாய பணியிட மாற்றம் உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்😡" என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages