இன்றைய 🏛சட்டப்பேரவையில் பொதுப்பணி, 🛣நெடுஞ்சாலைத் துறைகள் மானியக் 🙏கோரிக்கை மீதான விவாதங்கள்🗣 நடந்தது. அப்போது, 💺முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு புதிய அறிவிப்புகளை🔈வெளியிட்டார். அவர் கூறியதன் விவரங்கள் இதோ👇 _
_🔰 திருச்சி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் 2018-ல் 6 ரயில்வே மேம்பாலங்கள் ரூ.247கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. ரூ.2,991கோடி செலவில் 10,487 கி.மீ சாலையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
🔰சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பெருங்களத்தூர் முதல் சிங்கப்பெருமாள்
கோவில் வரை உள்ள 4 வழிச்சாலை 8 வழிச்சாலையாக மாற்றும் பணிகள் தொடங்கியுள்ளன
🔰மெரினாவில் ஜெயலலிதா நினைவிட கட்டுமானப் பணிகள் வருகிற டிசம்பர் மாதத்திற்குள் முடிவடையும்.
சென்னை பெருநகர பகுதிகளில் ரூ.1,122 கோடியில் 18 பாலப் பணிகள் மேற்கொள்ளப்படும் .13 மேம்பாலங்கள், 2 ரயில்வே பாலங்கள், 2நடை மேம்பாலங்கள், 1 ஆற்றுப்பாலம் அமைக்கப்படும்.
🔰சென்னையில் 9 இடங்களில் பாலம் கட்ட திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.2.35 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 9 மாவட்டங்களில் 32 இடங்களில் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட ரூ.3.50 கோடியில் திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.
🔰ரயில்வே மேம்பாலங்கள் 3 இடங்களில் கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை ரூ.1.08 கோடி செலவில் தயாரிக்கப்படும்.
🔰1456 கிமீ நீள ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகள் மாவட்ட இதர சாலைகளாக தரம் உயர்த்தப்படும்.
🔰தமிழ்நாட்டில் உள்ள நெல்லை, சேலம், விழுப்புரம் மாவட்டங்களில் ரூ.137.42கோடியில் புதிய ஏரிகள், நீர்த்தேக்கங்கள் மற்றும் கசிவு நீர் குட்டைகள் அமைக்கப்படும்.
🔰பாதியில் நிற்கும் மதுரவாயல் - சென்னை துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டப்பணி மீண்டும் தொடங்கப்படும்.
Home
அண்மை செய்திகள்
🛣பெருங்களத்தூர் முதல் சிங்கப்பெருமாள் கோவில் சாலை 8 வழிசாலையாக மாறும்👍-💺முதல்வர்🎙
🛣பெருங்களத்தூர் முதல் சிங்கப்பெருமாள் கோவில் சாலை 8 வழிசாலையாக மாறும்👍-💺முதல்வர்🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment