🚗வாகனப் பதிவுக் 💸கட்டணம் உயருகிறது⏫-🏛மத்திய அரசு - Agnipuratchi

🚗வாகனப் பதிவுக் 💸கட்டணம் உயருகிறது⏫-🏛மத்திய அரசு

Share This

⛽எரிபொருளில் இயங்கும் 🚗வாகனங்களின் பயன்பாட்டைக் குறைக்கும்⏬ வகையிலும், 🔌மின்சாரத்தில் இயங்கும் 🚗வாகனங்களின் எண்ணிக்கையையும், பயன்பாட்டையும் அதிகரிக்கும்⏫ வகையிலும் வாகனப் பதிவுக் 💸கட்டணங்களை பல மடங்கு உயர்த்த⏫ மத்திய 🛣சாலைப் போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது😯. இதற்காக புதிய வாகனங்கள் பதிவு மற்றும் மறு பதிவிற்கான 💸கட்டணங்கள் கடுமையாக உயர்த்தப்பட உள்ளன😳. இதன்படி இலகு ரக கார்களுக்கான பதிவுக்கட்டணம் 💸600 ரூபாயில் இருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது😱. மேலும் வாகன புதுப்பிப்புக் கட்டணத்தை 💸2 ஆயிரம் ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது🙄. இதேபோல் 🚲இருசக்கர வாகனங்களுக்கான பதிவு கட்டணத்தையும் உயர்த்த 🏛மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி தற்போது 💸50 ரூபாயாக இருக்கும் பதிவுக் கட்டணம் புதிய விதிகளின் படி ஆயிரம் ரூபாயாக வசூலிக்கப்படும் என்று கூறப்படுகிறது🗣. இதேபோல் லாரி, டிரக், 🚌பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கான பதிவுக் கட்டணம் 2 ஆயிரம் ரூபாயில் இருந்து 40 ஆயிரம் ரூபாயாக உயர்த்தவும்😨 போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages