தமிழக சட்டமன்றத்தில் இன்று திரு. இராமசாமி படையாச்சியார் திருவுருவப்படம் காலம் கடந்த நிலையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருவுருவப்படத்தை திறந்து வைத்தார், இன்நிகழ்சியில் பா.ம.க இளைஞர் அணி தலைவரும் ராஜசபா உறுப்பினர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், பா.ம.க தலைவர் ஜி.கே.மணி, முன்னால் இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழக அரசுக்கு வாழ்த்துக்கள்... படையாட்சியாரின் சமூக நீதி அரசியல் வியூகம்
கடந்த 1952 ல் நடைபெற்ற இந்திய பொது தேர்தலில் தமிழக பெரும்பான்மை சமூகத்திற்கு காங்கிரஸ் கட்சி பிரதிநிதித்துவம் அளிக்காததால் காமராஜிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதில் இருந்து விலகிய இராமசாமி படையாட்சியார் அவர்கள் உழைப்பாளர் பொதுநலக்கட்சி என்ற மாபெரும் இயக்கத்தை மிக குறுகிய காலத்தில் ஆரம்பித்து தமிழக பெரும்பான்மை சமூகம் வாழக்கூடிய தமிழக வட மாவட்டம் முழுவதும் அன்றைக்கு எந்த தகவல் தொடர்பு சாதனங்கள் இல்லாத அந்த காலத்தில் அடுப்பு கரி மூலம் சுவற்றில் பிரச்சார சுவர் விளம்பரம் எழுதி தேர்தல் பிரசாரம் செய்து 19 சட்ட மன்ற தொகுதிகளையும் 4 பாராளுமன்ற தொகுதிகளையும் கைப்பற்றியது இந்திய அரசியலில் ஒரு மாபெரும் சாதனையாக அப்போது பேசப்பட்டது. அதுவும் திண்டிவனம் பாராளுமன்ற தொகுதியில் தினமணி நாளிதழ் உரிமையாளர் மிக பெரும் பணக்கார திரு. கோயங்கோ அவர்கள் காங்கிரஸ் கட்சி சார்பில் நின்றார். அவர் ஹெலிகாப்டர் மூலம் வானத்திலிருந்து பணத்தை வாரி இறைத்து வாக்கு கேட்டு படையாட்சியார் அவர்களிடம் தோற்று தன் டெபாசிட்டையே இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
இப்படி ஒரு இமாலய வெற்றி பெறுவதற்கு காரணம் அன்றைக்கு சுதந்திர போராட்டத்தில் சுதந்திர காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மையான இன மக்கள் சிறை சென்று சொல்லொன்னா துயரத்தை அனுபவித்தனர். அதற்கு மாறாக காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான சமூக மக்களுக்கு தேர்தலில் சரியான அங்கீகாரம் தரப்படாததால் வெகுண்டெழுந்த படையாட்சியார் அவர்கள் "வன்னியர் ஓட்டு அன்னியருக்கில்லை" என்ற மாபெரும் இடி முழக்கத்தை முழக்கி வன்னியர்கள் மனதில் சமுதாய உயர்வை தூண்டி மிகப்பெரிய வெற்றி பெற்றார்.
அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அறுதி பெரும்பான்மை கிடைக்காததால் தமிழக த்தில் ஆட்சி அமைக்க காமராஜரால் முடியவில்லை.
1952 ஆண்டு மாணிக்கவேல் நாயகர் ஆதரவுடன் ( இராமசாமி படையாட்சியார் வெளியில் இருந்து ஆதாரவு கொடுத்தார்) இராஜாஜி முதல்மைச்சர் ஆனார் குல கல்வி திட்டத்தை கொண்டுவந்ததால் இராமசாமி படையாட்சியார் இராஜாஜி ஆட்சிக்கு எதிராக கொடுக்கூர் விஸ்வநாதன் மூலம் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தார் அதனால் இராஜாஜி பதவி விலகினார்
உடனடியாக காமராஜர் அவர்கள் கவர்னரை சந்தித்து முறையிடுகிறார். உடன் கவர்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற படையாட்சியார் அவர்களை சந்தித்து அவரிடம் இருக்கின்ற 19 எம். எல். ஏக்கல் ஆதரவை பெற்று ஆட்சியை அமைப்பதற்கு உண்டான ஏற்பாட்டை உடனே செய்யுங்கள் என்று ஆலோசனை சொல்கிறார் கவர்னர் .
உடனே காமராஜர் ஆதித்தனார் மூலம் படையாட்சியார் வீட்டுக்கு அனுப்பி பேச்சுவார்த்தை நடத்துகிறார். எதையும் நீங்கள் மனதில் வைத்து கொள்ள வேண்டாம் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் நீங்கள் உங்களிடம் இருக்கின்ற 19 MLA க்கள் ஆதரவை தாருங்கள் என்று கேட்க நிச்சயம் ஆதரவு தருகிறேன்.
ஆனால் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரான எங்கள் வன்னியர் சமுதாய மக்களுக்காக மூன்று கோரிக்கைகளை நீங்கள் நிறைவேற்றி தரும் பட்சத்தில் நான் ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாக படையாட்சியார் கூறுகிறார்.படையாட்சியார் வைத்த மூன்று கோரிக்கை....
முதல் கோரிக்கை!
பிரிட்டிஷ் அரசாங்கம் வன்னியர் இன மக்களை குற்ற பரம்பரையில் சேர்த்துள்ள கடுமையான அந்த சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும்.
இரண்டாவது கோரிக்கை தமிழகத்தின் பெரும்பான்மை சமுதாயமான வன்னியர்களுடன் மிகவும் பின்தங்கிய தமிழ் சாதிகளை இனைத்து MBC என்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு ஏற்படுத்தி தரவேண்டும்
மூன்றாவது கோரிக்கை.
வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் ஏழை எளிய சமுதாய பிள்ளைகளுக்கு ஒரு வேளை உணவிற்கு வழி இல்லாததால் அவர்கள் கல்வி கற்க பள்ளிக்கூடம் வர மறுப்பதால் ஒரு வேளை மதிய உணவு வழங்கினால் அவர்கள் நிச்சயம் பள்ளிக்கு வருவார்கள் அவர்களின் வாழ்க்கை தரம் உயரும் ஆகையால் இலவச கல்வி அளித்து மதிய உணவு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று காமராஜிடம் படையாட்சியார் கோரிக்கை வைக்கின்றார்.
நல்ல கோரிக்கைதானே நீங்கள் கேட்ட அந்த இலவச கல்வி மதிய உணவு திட்டம் அனைத்து சமுதாய பிள்ளைகள் அனைவருக்கும் செய்து விடலாம் என்று சொல்கிறார்.
அதன் பிறகு படையாட்சியாரின் உழைப்பாளர் பொது நலக்கட்சி 19 சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் அன்றைக்கு காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் காமராஜர் தலைமையில் ஆட்சியமைகிறது.
படையாட்சியாருக்கு காமராஜர் அமைச்சரவையில் ஸ்தாபன துறை அமைச்சர் என்ற அந்தஸ்தை கொடுத்து கொளரவபடுத்தினார் காமராஜர்.
முதல் கோரிக்கையான குற்றப்பரம்பரை சட்டத்தை நீக்கி சட்டசபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி அந்த சட்டத்தை முடக்கி வன்னியர்களின் நீண்ட நாள் கனவை காமராஜர் நிறைவேற்றினார்.
இரண்டாவது கோரிக்கையான ஏழை பிள்ளைகளுக்கு இலவச கல்வி, இலவச மதிய உணவு திட்டத்தை அனைத்து சமுதாய பிள்ளைகள் பயன் பெறும் வகையில் இலவச கல்வி, இலவச மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார் . இன்றைக்கு அந்த திட்டம் பரிணாம வளர்ச்சி அடைந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது.
மூன்றாவது கோரிக்கையான (The Single Larchest Majority Community In Tamil nadu) தமிழகத்தின் தனிப்பெரும் சமுதாயம் வன்னியர் சமுதாய மக்களின் MBC என்ற மிகவும் பிற்ப்படுத்தப்பட்ட பிரிவு கோரிக்கையை 39 தமிழ் சாதிகளை இனைத்து சில உரிமைகளை கொடுத்து முதல்வர் நிறைவேற்றி கொடுத்தார். பின்பு 1972 திமுக ஆட்சியின் போது MBC பிரிவை நீக்கி திரும்பவும் வன்னியர்கள் போராட வேண்டிய நிலையை உருவாக்கினார்கள் திராவிட ஆட்சியாளர்கள்.
மேலும் கடலூரில் பெரும் செல்வந்தராக இருந்த பெருந்தலைவர் அய்யா இராமசாமி படையாட்சியார் அவர்கள் இன்றைக்கு கடலூர் மத்தியில் இயங்ககூடிய பேருந்து நிலையம் சுமார் பத்து ஏக்கர் நிலத்தையும் அரசுக்கு தானமாக கொடுத்தார். இன்றைக்கு அதன் மதிப்பு பல நூறு கோடி ரூபாய்.
மேலும் கடலூர் செம்மண்டலத்தில் இயங்கி வரும் அரசு தொழிற்பயிற்ச்சி நிலையத்தின் 15 ஏக்கர் நிலம் அவரால் அரசுக்கு தானமாக வழங்க பட்டதுதான் அதன் இன்றைய மதிப்பு பல நூறு கோடிகளை தாண்டும்.
மேலும் கடலூரில் இயங்கி வரும் தினதந்தி அலுவலக ஒரு ஏக்கர் இடம் ஆதித்தனார் அவர்கள் கேட்க அதையும் பணம் வாங்காமல் தானமாக கொடுத்த இராமசாமி படையாட்சியார் என்றால் அது மிகை ஆகாது.
No comments:
Post a Comment