ஹெல்மெட் அணியாமல் 🚲வாகனம் ஓட்டிய 👮எஸ்ஐ சஸ்பெண்ட். - Agnipuratchi

ஹெல்மெட் அணியாமல் 🚲வாகனம் ஓட்டிய 👮எஸ்ஐ சஸ்பெண்ட்.

Share This

🏛சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை⚖ அடுத்து சென்னை முழுவதும் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது👍. இந்நிலையில், தமிழக 👮டிஜிபி திரிபாதி பொறுப்பேற்றதும் காவல் நிலையங்களுக்கு சுற்றறிக்கை🗞 ஒன்றை அனுப்பினார். அதில் "அனைத்து 👮காவலர்களும் 🚌போக்குவரத்து விதிகளை பின்பற்ற வேண்டும் எனவும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் இல்லையெனில் 😡கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என ⚠எச்சரிக்கை விடுத்திருந்தார். சமீபத்தில் சென்னை போலீசில் 📲GCTP எனப்படும் புதிய செயலி ஒன்றை கமிஷனர் விஸ்வநாதன் அறிமுகப்படுத்தினார்👏. அதில் 👮போலீசார் ஹெல்மெட் அணியாமல் சென்றாலும் அது குறித்து 📷புகைப்பட ஆதாரத்துடன் புகார் அளிக்கும் ஆப்சன் இருந்த நிலையில், 👮எஸ்ஐ ஒருவர் தலையில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக🙄 புகார் 2 முறை பதிவாகி உள்ளதாக தெரிகிறது😯. இது குறித்து 🤵உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து, சென்னை மாம்பலம் போலீஸ் நிலைய சட்டம் ஒழுங்கு 👮எஸ்ஐ மதன் குமார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்யச்சொல்லி கமிஷனர் 👮விஸ்வநாதன் தென்சென்னை இணைக்கமிஷனர் 👩மகேஷ்வரிக்கு உத்தரவிட்டார்⚖. அதன் அடிப்படையில் 👮எஸ்ஐ மதன்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்😳. இச்சம்பவம் பரபரப்பினை😨 ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages